பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்குப் பதிவு கட்டணத்திலிருந்து விலக்களிக்க முன்மொழிந்தது மத்திய அரசு!
By : Janani
அரசாங்கம் பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு முன்பதிவு செய்யும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க முன்மொழிந்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை, சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், பேட்டரி மூலம் இயங்கும் வாகனங்களுக்கு முன்பதிவு செய்யும் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
"மே 27 2021 தேதியிட்ட மத்திய சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்ட விரைவு அறிக்கையில், மத்திய மோட்டார் வாகன விதி 1989 கீழ், RC புதுப்பிப்பது அல்லது புதிய பதிவை மேற்கொள்ளக் கட்டணம் செலுத்துவது போன்றவற்றில் இருந்து BOV விலக்கு அளிக்க முன்மொழிகிறது," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் வரைவு அறிக்கை வெளியானதில் இருந்து 30 நாட்களுக்கு பொது மக்கள் மற்றும் பங்குதாரர்களிடம் கருத்துக்கள் கோரப்படுகின்றது. மேலும் அமைச்சகம், அன்ஹைட்ரொஸ் எத்தனால் அல்லது பெட்ரோல் எத்தனால் மூலம் இயங்கும் மோட்டார் வாகனங்களுக்குப் பாதுகாப்பு தேவையை அறிவிக்கும் தனித் தனி அறிக்கையும் வெளியிட்டுள்ளது. அது L, M, N பிரிவுகளின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் நச்சுத்தன்மை கையாளும் முறை குறித்தும் வெளியிடப்பட்டுள்ளது. மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த திட்டமானது மின் இயக்கத்தை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படுகிறது.
source: https://www.businesstoday.in/sectors/auto/centre-proposes-exemption-for-battery-operated-vehicles-from-registration-fees/story/440601.html