சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைப்பு : இந்தியா பரிசீலனை.!
By : Janani
கடந்த மாதம் சமையல் எண்ணெய்யின் விலை உச்சத்தை எட்டியதைத் தொடர்ந்து, உலகின் மிகப்பெரிய காய்கறி எண்ணெய் இறக்குமதியாளர்கள் உணவு செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான வரியைக் குறைக்க இந்தியா பரிசீலனை செய்து வருகிறது.
எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், வரி குறைப்பு விலையைக் குறைத்து நுகர்வோரை ஆதரிக்கும் மற்றும் மலேஷியா பாமாயில், சோயா மற்றும் நிலக்கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையையும் குறைக்கும்.
"சமையல் எண்ணெய் இறக்குமதி செய்யும் வரியைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்கப்படுகிறது," என்று அரசாங்க அதிகாரி ஒருவர் புதன்கிழமை அன்று தெரிவித்தார். வரி குறைப்பது குறித்த இறுதி முடிவானது இந்த மாதம் இறுதியில் எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் ஏற்கனவே மக்களுக்கு வருமான குறைவால் எரிபொருள் விலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு சோயாஆயில், மற்றும் பாமாயில் விலை கடந்த ஆண்டில் இருந்து இரண்டு மடங்காக அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியா தனது சமையல் எண்ணெய் தேவையில் மூன்றில் இரண்டு பங்கை இறக்குமதி மூலம் பூர்த்தி செய்கிறது. பாமாயில் இறக்குமதிக்கு 32.5 சதவீதம் வரி விதிக்கிறது மற்றும் சோயாபீன் மற்றும் சோயா ஆயில் இறக்குமதிக்கு 35 சதவீதம் வரியை விதித்தது.
ஆனாலும் இந்த வரிகளைக் குறைப்பதற்கு தொழில்துறையில் பலர் எதிர்ப்புகளைத் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த வாரம் சமையல் எண்ணெய் குறைப்பது குறித்து விவாதிக்க நடந்த கூட்டத்தில், நுகர்வோர் விற்பனைக்கு மானியமாக வரிகளை பயன்படுத்துமாறு SEA பரிந்துரை செய்தது என்று குழு தலைவர் BV மேத்தா தெரிவித்தார்.
"மானிய விலையில் சமையல் எண்ணெய்யை வழங்குவதன் மூலம் இறக்குமதி வரியைக் குறைக்காமல் ஏழை மக்களுக்கு அரசு உதவ முடியும்," என்று மேத்தா தெரிவித்தார்.
Source: எகனாமிக் டைம்ஸ்