Kathir News
Begin typing your search above and press return to search.

பொது நிறுவனங்களின் துறையை இணைப்பதன் மூலம் விரிவடைகிறது நிதியமைச்சகம்!

பொது நிறுவனங்களின் துறையை இணைப்பதன் மூலம்  விரிவடைகிறது நிதியமைச்சகம்!
X

JananiBy : Janani

  |  8 July 2021 1:15 AM GMT

புதன்கிழமை அன்று மத்திய அரசாங்கம் பொது நிறுவன துறையை நிதியமைச்சகத்தோடு இணைத்து நிதி அமைச்சகத்தை விரிவுபடுத்தியுள்ளது. இது முன்னதாக கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவன அமைச்சகத்தின் கீழ் இருந்தது.


இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தற்போது நிதியமைச்சகத்தின் கீழ் 6 துறைகள் உள்ளது. தற்போது கனரக தொழில்கள் மற்றும் பொது நிறுவனம், கனரக தொழில்த்துறை அமைச்சகம் என்று அழைக்கப்படும். இந்த மாற்றத்தை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய மாற்றம் தொடர்பான அறிக்கை மத்திய செயலகத்தால் வெளியிடப்பட்டது. இந்த திருத்தும் உடனடியாக நடைமுறைக்கு வரவுள்ளது.

வல்லுநர்களின் கூற்றுப்படி, ஏற்கனவே நிதியமைச்சகத்தின் கீழ் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுடன் கையாளும் ஒரு துறை உள்ளது. DPE யை சேர்ப்பது சிறந்த ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

முன்னர், முதலீடு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்ள நிதியமைச்சகம் மற்றும் DIPAM ஒருங்கிணைந்து DPE உடன் செயல்பட வேண்டியிருந்ததால் பிரச்சனைகள் தாமதமாக எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தற்போது இரண்டு துறைகளும் ஒரு அமைச்சகத்தின் கீழ் இயங்குவதால், விரைவான தீர்வு மற்றும் அதிக ஒருங்கிணைப்பினை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.


இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை அன்று மத்திய அரசாங்கம் புதிய 'ஒத்துழைப்பு அமைச்சகத்தை' அமைத்தது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News