வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கே முன்னுரிமை - புதிய தொழிலாளர் துறை அமைச்சர்!
By : Janani
நாட்டில் வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதற்கு நான்கு தொழிலாளர்கள் குறியீடுகளை விரைவில் வெளியிடுவதும் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகம் உருவாக்குவதே முன்னுரிமையாக இருக்கும் என்று புதிதாகப் பொறுப்பேற்ற தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்திர யாதவ் வியாழக்கிழமை அன்று தெரிவித்தார்.
"வியாழக்கிழமை அமைச்சகம் பொறுப்பேற்ற பின்பு, தொழிலாளர் அமைச்சகத்தில் நிலுவையில், மற்றும் நடந்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் குறித்து கண்டனர்," என்று பூபேந்திர யாதவ் பொறுப்பேற்றவுடன் தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் அவர் உயரதிகாரிகளிடம், தங்கள் மனதில் இருக்கும் புதிய யோசனை எது இருந்தாலும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார், எனவே அமைப்பு சார்ந்த மற்றும் சாரதா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்ற திட்டம் மற்றும் கொள்கைகளை அமைக்கமுடியும் என்று தெரிவித்தார்.
கடந்த ஆண்டு பாராளுமன்றத்தில் வெளியிட்ட நான்கு தொழிலாளர்கள் குறியீடுகள் குறித்த வசதிகளை மத்திய அமைச்சகம் தயாராக வைத்துள்ளது, இருப்பினும் குறியீடு முழுமையாக அமல்படுத்திய பின்பு சட்டரீதியாகத் தடைகளைத் தவிர்க்க மாநிலங்களில் தங்கள் களத்தில் உள்ளவர்கள் இறுதி செய்யக் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கும் யாதவ், நாடாளுமன்றத்தில் பல முக்கியமான குழுக்களுக்குத் தலைமை தாங்கினார். 2012 இல் ராஜஸ்தானின் பிரதிநிதியாகப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
Source: எகனாமிக் டைம்ஸ்