Kathir News
Begin typing your search above and press return to search.

பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அரசாங்கத்தின் புதிய முயற்சிகள் !

பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியின் கீழ், பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றங்களின் தொகுப்பு.

பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய அரசாங்கத்தின் புதிய  முயற்சிகள் !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Sep 2021 1:09 PM GMT

கடந்த ஆட்சியில் இருந்ததை விட இந்த ஆட்சியில் அதிகமாக இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(GDP) நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாக எடுத்துரைக்கிறது. மேலும் ஆகஸ்ட் மாதத்திற்கான GST வசூல் தொகை ஒரு மைல் கல்லாக மாறியது. இது முந்தைய ஆண்டு இதே மாதத்திலிருந்து 30 சதவிகிதம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியின் கீழ், இந்தியா கொரோனா நோய் தொற்றிலிருந்து விரைவான நேரத்தில் மீண்டு வர முடிந்தது. எனவே இது 'சிறந்த பொருளாதாரக் கண்ணோட்டம்' என்ற அடையாளத்தை சரியாகப் பெற்றுள்ளது.



இருப்பினும் இது முந்தைய அரசாங்க ஆட்சிகளைப் போலல்லாமல், முரண்பாடுகளை மற்றும் மக்களுக்கு எது தேவை என்பதை நன்கு உணர்ந்து நாட்டின் ஒவ்வொரு முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக "ஜன் தன் யோஜனா" திட்டம் பல்வேறு மக்களின் வங்கி கணக்குகளை தொடங்கி வைத்துள்ளது. அங்கு மக்கள் தொகையின் பெரும்பகுதியை வங்கித் துறையுடன் தொடர்பு கொள்ள பிரதமர் மோடி துணிச்சலான முடிவை எடுத்தார். இதன் விளைவாகத்தான் கிராமப்புறங்களில் உள்ள பெரும்பாலான மக்கள் தற்பொழுது வங்கிகளில் தனக்கு என்று ஒரு வங்கி கணக்கை வைத்துள்ளனர். இதன் விளைவாக, 2020 புள்ளிவிவரங்களின் படி, ஜனவரி மாதம் ஜன் தன் யோஜனா கீழ் வங்கியில் வைப்பு இந்த திட்டத்தின் மீது 40 கோடி பயனாளிகளாக கணக்குகள் உள்ளன. இத்தகைய செயல்கள் இந்தியப் பொருளாதாரத்தில் மிகப்பெரிய பங்கை வகித்துள்ளன.


உலகின் மிகச் சிறந்த பணப் பரிமாற்றத் திட்டம் இந்தியாவில் இருக்கிறது. இருப்பினும் வங்கிக் கணக்குகளைத் திறப்பது என்பது மோடி அரசாங்கத்தின் திட்டத்தில் உள்ள பெரும் திட்டத்திற்கான ஒரு படியாகும். பின்னர் நேரடிப் பணப் பரிமாற்றத் திட்டம் (DBT) திட்டம் பொதுமக்களுக்குப் பணப் பரிமாற்றத்தில் புரட்சியை ஏற்படுத்தியது. DBIயை செயல்படுத்தும்போது, ​​இந்தியா ஜன் தன்-ஆதார்-மொபைல் (JAM) திறம்பட பயன்படுத்தியது. உலகெங்கிலும் உள்ள நாடுகளில் பொதுக் கொள்கை மற்றும் நலப் பிரச்சினைகளில் பணியாற்றிய பில் கேட்ஸ் போன்ற தொழில்முனைவோர் இந்தியாவின் இந்த திட்டத்தைப் பற்றி கூறுகையில், குடிமக்களுக்கு பணத்தை மாற்றுவதற்கான மிக நுட்பமான வழி JAM என்று அழைத்தனர்.



சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் நுகர்வோருக்கு உதவும் வகையில் ஒரு பெரிய சீர்திருத்தத்தை அறிவித்தார். ஒரு தேசம், ஒரு MSP, ஒரு DTP என விவரிக்கக்கூடிய புதிய கருத்தை அவர் அறிமுகப் படுத்தியுள்ளார். போலி விவசாயிகள் டெல்லியின் எல்லையில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோடி அரசு விவசாயிகளின் பயிர்களின் விலையை நேரடியாக அவர்களின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து வருகிறார்கள். மோடி அவர்களின் அரசு பதவி ஏற்றபின், நாட்டின் ரியல் எஸ்டேட் துறை ஒரு மறுமலர்ச்சி கண்டது உள்ளது. ரியல் எஸ்டேட் துறையில் நிலவும் ஊழலைத் தடுக்க அரசாங்கம் மாற்றங்களைக் கொண்டு வந்ததால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெரும் ஏற்றத்தைக் கண்டது.


சீனாவால் உருவாக்கப்பட்ட தொற்றுநோயை உலகம் தொடர்ந்து எதிர்த்துப் போராடி வரும் நிலையில், இந்தியா தடுப்பூசி மையமாக உருவெடுத்துள்ளது. இந்தியா சமீபத்தில் உலகின் முதல் DNA அடிப்படையிலான தடுப்பூசியை உருவாக்கியது மற்றும் ஒரே நேரத்தில் 1 கோடி தடுப்பூசிகளை ஒரு வார காலத்திற்குள் இரண்டு நாட்களில் தடுப்பூசி போட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது எனவே இத்தகைய ஆட்சி மாற்றங்களை நோக்கி இந்தியா மறுமலர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. மேலும் இந்திய பொருளாதாரமும் முன்பு இருந்ததைவிட தற்போது வளர்ச்சிப் பாதையை நோக்கி செல்கிறது என்று கூறலாம்.

Input & Image courtesy:TFI post

Next Story
கதிர் தொகுப்பு
Trending News