Kathir News
Begin typing your search above and press return to search.

நாளை முதல் புதிய மாற்றங்களை எதிர்நோக்கும் தபால் துறை !

இந்திய தபால் துறையில் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு தெரிய வேண்டிய முக்கிய தகவல்.

நாளை முதல் புதிய மாற்றங்களை எதிர்நோக்கும் தபால் துறை !
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Sep 2021 1:03 PM GMT

இந்திய தபால் துறை கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது. அந்த வகையில், நீங்கள் தபால் துறையில் கணக்கு வைத்திருந்தால் நிச்சயம் இந்த தகவலை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அஞ்சலக ATM பரிவர்த்தனைகளில் முக்கிய விதிமுறைகள் மாற்றப்பட்டுள்ளது. புதிய விதிகள் தற்பொழுது நாளை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக இந்திய தபால் துறை அறிவித்துள்ளது. இதன்படி அக்டோபர் 1ம் தேதி முதல், அஞ்சலக ATM கார்டு அல்லது டெபிட் கார்டுக்கான பராமரிப்புத் தொகை ஆண்டுக்கு 125 ரூபாயும் மேலும் சரக்கு சேவை வரி(GST) சேர்த்து வசூலிக்கப்பட உள்ளது.


இந்தக் கட்டணம் 2022ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 1ம் தேதி முதல் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் SMS அலர்ட்டுகளுக்கு 12 ரூபாயும் மேலும் சரக்கு சேவை வரி(GST) வசூலிக்கப்படும். மேலும் வாடிக்கையாளர் தனது ATM கார்டை தொலைத்துவிட்டால், புதிய கார்டு பெறுவதற்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படும். அது மட்டுமல்ல ATM பின் நம்பர் தொலைந்துவிட்டால், புதிய பின் நம்பரை பெறுவதற்கு அஞ்சலக கிளைக்கு சென்று 50 ரூபாய் செலுத்த வேண்டும்.


ATM-ல் பரிவர்த்தனை மற்ற வங்கிகளின் ATMகளில் பணம் எடுக்கும்போது, மெட்ரொ நகரங்களில் மாதம் மூன்று முறையும், மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறையும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் ஒவ்வொரு முறையும் 8 ரூபாய் செலுத்த வேண்டும். POSல் பணம் எடுத்தால் எவ்வளவு கட்டணம் அஞ்சலகங்களின் POSகளில் பரிவர்த்தனை செய்தால் பணப் பரிவர்த்தனைக்கு 1% கட்டணம் வசூலிக்கப்படலாம். ஆக மொத்தத்தில் இனி அஞ்சலக வாடிக்கையாளர்கள் இனி அஞ்சலக பரிவர்த்தனைகளுக்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Input & Image courtesy:Zee news


Next Story
கதிர் தொகுப்பு
Trending News