பென்ஷனில் புதிய அளவீட்டை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு !
குடும்ப பென்ஷன் இல் புதிய அளவீட்டு மேற்கொள்ளும் முடிவை பாதுகாப்புத்துறை அமைச்சகம் எடுத்துள்ளது.
By : Bharathi Latha
அரசு அதிகாரிகள் அல்லது ஊழியர்கள் அவர்களுடைய ஓய்விற்கு பிறகு கொடுக்கப்படும் ஃபேமிலி பென்ஷன் அளவில் தற்பொழுது புதிய அளவீட்டு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மேற்கொள்ள உள்ளது. மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் மாற்று திறனாளி பிள்ளைகள், உடன் பிறந்தவர்களுக்கு அளிக்கப்படும் பென்ஷன் தொகையை வழங்க வருமான அளவீட்டை மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம் மாற்றுதிறனாளி பிள்ளைகள் அல்லது உடன் பிறந்தவர்கள் குடும்ப பென்ஷன் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து, கூடுதலாக பலர் பலன் அடைவார்கள். தற்போது குடும்ப பென்ஷன் பிரிவில் அரசு ஊழியர் அல்லது பென்ஷன் பெறுவோர் இறக்கும் பட்சத்தில் அவர்களின் குடும்பத்திற்கு இறந்த அரசு ஊழியரின் கடைசியாக பெற்ற சம்பளத்தில் 30 சதவீதம் அதிகப்படியாக வழங்கப்படும்.
இந்நிலையில் தற்போது மாற்றுதிறனாளி பிள்ளைகள், உடன் பிறந்தவர்களின் மொத்த வருமானம் பென்ஷன் தொகையை விடவும் குறைவாக இருக்கும் பட்சத்தில் வாழ்நாள் முழுவதும் குடும்ப பென்ஷன் பெறு தகுதிய அடைவார்கள் என பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தற்போது மாற்றுதிறனாளி பிள்ளைகள் அல்லது உடன் பிறந்தவர்களுக்கு கிராக்கிப்படி உடன் சேர்த்து 9000 ரூபாய்க்கு அதிகமாக அளிக்கப்படமாட்டாது. தற்போது புதிய உத்தரவு மூலம் இந்த 9000 ரூபாயக்கும் குறைவான வருமானம் கொண்ட மாற்றுதிறனாளி பிள்ளைகள் அல்லது உடன் பிறந்தவர்கள் இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குடும்ப பென்ஷன் தொகை வழங்கப்படும், மேலும் இப்புதிய மாற்றம் பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு பின் தேதியில் இருந்து கணக்கிட்டு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு மத்திய அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த 17 சதவீதத்தில் இருந்த கிராக்கிப்படி அளவீட்டை 28 சதவீதமாக உயர்த்தி அறிவித்தது. இந்த அறிவிப்பு மூலம் அரசு ஊழியர்களின் சம்பளம் பெரிய அளவில் அதிகரித்தது. தற்போது மத்திய அரசு திட்டமிட்டுள்ள படி, DA மற்றும் DR சேர்த்து 3 சதவீதம் கூடுதலாக அதிகரிக்கத் திட்டமிட்டு ஆலோசனை நடத்தி வருகிறது. இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் DR நிவாரணம் அளவீடு 31 சதவீதம் வரையில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது,
Input & Image courtesy: Zee news