Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவில் முதல்முறையாக தனியார் வங்கி வரியை வசூல் செய்யும்: ஒப்புதல் வழங்கிய அமைச்சகம்!

இந்தியாவில் முதல் முறையாக இந்த தனியார் வங்கி நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் செய்ய மத்தியஅரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியாவில் முதல்முறையாக தனியார் வங்கி வரியை வசூல் செய்யும்: ஒப்புதல் வழங்கிய அமைச்சகம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 Oct 2021 1:44 PM GMT

மக்களிடம் இருந்து அரசு இரண்டு விதமான வரிகளை வசூலித்து வருகிறது. ஒன்று நேரடி வரி வசூலான வருமான வரி(IT) மற்றொன்று மறைமுக வரி வசூலான சரக்கு மற்றும் சேவை வரி(GST) ஆகும். மத்திய அரசு வரி வசூல் அளவை அதிகரிக்கவும் மேலும் வரியை அரசுக்கு செலுத்த மக்களுக்குப் பல வழிகளை உருவாக்கி வரும் நிலையில் தற்போது முதல் முறையாக ஒரு தனியார் வங்கியான கோட் டாக் மஹிந்திரா வங்கிக்கு வருமான வரி, GST உட்பட அனைத்து நேரடி மற்றும் மறைமுக வரியை தனது வங்கி நெட்வொர்க் மூலம் வசூலிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் கோட்டாக் மஹிந்திரா வங்கி இனி தனது வங்கி கிளைகளில் அனைத்து விதமான அரசு வரிகளையும் வசூலிக்க முடியும்.


இது வரி வசூலில் மத்திய அரசுக்கும் தனியார் அமைப்புக்கும் மத்தியில் மிகப்பெரிய கூட்டணியாக உள்ளது. மேலும் இதுகுறித்து நிர்மலா சீதாராமன் அவர்கள் வெளியிட்டுள்ள ஒப்புதல் தொடர்பான சேவைகளில் அனைத்து வங்கிகளும் பங்குபெற வேண்டும் என்ற திட்டத்தில் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தனியார் வங்கி பிரிவில் நேரடி மற்றும் முறைமுக வரியை வசூல் செய்யக் கோட் டாக் மஹிந்திரா வங்கிக்கு மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் ஒப்புதலை தற்பொழுது அளித்துள்ளார். வரி வசூல் வரி வசூல் சேவைக்கான தொழில்நுட்ப இணைப்புகளைக் கோட் டாக் மஹிந்திரா வங்கி உடன் செய்யப்பட்ட பின்பு, இவ்வங்கி வாடிக்கையாளர்கள் நேரடியாகத் தங்களது நேரடி வரி மற்றும் மறைமுக வரியை செலுத்த முடியும்.


வங்கி வாடிக்கையாளர்கள் இதுமட்டும் அல்லாமல் வங்கி வாடிக்கையாளர்கள் வரியை கோட் டாக் மஹிந்திரா வங்கியின் மொபைல் பேங்கிங், நெட் பேங்கிங் வாயிலாக வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யலாம். இல்லையெனில் கோட் டாக் மஹிந்திரா வங்கி கிளைக்கு நேரடியாகச் சென்று கூட வரியை செலுத்தலாம். வர்த்தகம் மற்றும் தனிநபர் வரி இப்புதிய சேவை மூலம் தனியார் வங்கி வாடிக்கையாளர்கள் மிகவும் எளிதாகத் தங்களது வர்த்தகம் மற்றும் தனிநபர் வருமானத்திற்கு வரியை செலுத்த முடியும். மேலும் மத்திய அரசு கோட்டாக் மஹிந்திரா வங்கிக்குக் கொடுத்துள்ள இந்த அனுமதி இனிவரும் காலத்தில் தனியார் வங்கிகள் மத்திய அரசுடன் இணைந்து செயலாற்றும் என்பது தெள்ளத் தெளிவாகிறது.

Input & Image courtesy:Economic times



Next Story
கதிர் தொகுப்பு
Trending News