டிஜிட்டல் கரன்சியான பிட்காயினை உலக நாடுகள் அங்கீகரிக்குமா? நிராகரிக்குமா?
உலகளவில் தற்பொழுது முதலீட்டு வங்கியியல் நிறுவனமான JP மோர்கன் பிட்காயினை தவிர்க்கும் விதமாக செய்தியை வெளியிட்டுள்ளது.
By : Bharathi Latha
உலக அளவில் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமான JP மோர்கன் சேஸ் சமீபத்தில் முதலீட்டாளர்களுக்கு அனுப்பிய முக்கியமான கடிதத்தில், கிரிப்டோகரன்சி சந்தையின் முக்கிய டிஜிட்டல் கரன்சியாக விளங்கும் பிட்காயினுக்கு மக்கள் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது. ஆனால் இதை சட்டங்கள் அங்கீகரிப்பது கிடையாது என்ற காரணத்தினால் இவற்றை தவிர்க்குமாறு அவர் கூறியுள்ளார். உலக நாடுகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த வேளையில் பணவீக்கம் மற்றும் நாணய மதிப்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்சனையைச் சமாளிக்கப் பிட்காயினைப் பயன்படுத்த முடியும் என்று JP மோர்கன் சேஸ் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இவை சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே இருந்து வருகிறது. கிரிப்டோகரன்சி சர்வதேச சந்தையில் கிரிப்டோகரன்சி மிக முக்கியமான முதலீடாக மாறியுள்ள காரணத்தால் ரீடைல் முதலீட்டாளர்கள் முதல் பெரும் முதலீட்டாளர்கள் வரையில் மிகவும் ஆர்வமாகவும் முதலீடு செய்கின்றனர். முன்பு இருந்ததைவிட தற்போது மாறி வரும் தொழில்நுட்ப மாற்றத்தினால் அனைவரும் மிக சுலபமாக கிரிப்டோகரன்சி வணிகத்தில் ஈடுபட முடிகிறது.
குறிப்பாக இளம் தலைமுறையினர் அதிகளவில் கிரிப்டோ சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். முதலீட்டாளர்கள் எண்ணிக்கை உதாரணமாக இந்தியாவின் பலர் தங்களுடைய முதலீட்டை இந்த கிரிப்டோ கரன்சி முதலீடு செய்கிறார்கள் என்று ஆய்வு முடிவு கூறுகிறது. இதே நிலை தான் உலகம் முழுவதும், இந்நிலையில் JP மோர்கன் சேஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு பெரும் முதலீட்டுச் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Input & Image courtesy:Finance yahoo