Kathir News
Begin typing your search above and press return to search.

புதிய கிரிப்டோ பில்லுக்குப் பிறகு, கிரிப்டோகரன்சி இந்தியாவில் எவ்வாறு மாறக்கூடும்?

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் புதிய மசோதாவில் கிரிப்டோ பில் குறித்து கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கிரிப்டோ பில்லுக்குப் பிறகு, கிரிப்டோகரன்சி இந்தியாவில் எவ்வாறு மாறக்கூடும்?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  27 Nov 2021 12:56 PM GMT

நேற்றிரவு முதல் இந்தியாவில் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள 26 மசோதாக்கள் அடங்கிய பட்டியலை இந்திய அரசு பகிர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டதற்கு காரணம் என்றும் அறியப்படுகிறது. ஏனென்றால் வேறு பல துறைகளின் பில்களில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் கரன்சி பில், 2021 ஒழுங்குமுறை ஆகியவை இந்தப் பட்டியலில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த மசோதாவில் முன்மொழிந்தது என்னவென்றால், நாட்டில் தனியார் கிரிப்டோகரன்சிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அரசாங்கம் முன்மொழிந்துள்ளது.


மேலும் இந்த அனைத்து தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கும் பதிலாக, அரசாங்கம் அதன் சொந்த அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணயத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அரசாங்கத்தின் முக்கிய நோக்கமே முதலீட்டாளர்களை டிஜிட்டல் கரன்சிகளில் இருந்து பாதுகாப்பது நோக்கமாகும். எனவே அரசு இத்தகைய திட்டங்களை வெளியிட்ட அதைக் கட்டுப்படுத்தும் அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் தொடங்கும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் முன்வைக்கப்படும் மசோதாவில் முன்மொழியப்பட்டுள்ளதை வைத்துப் பார்த்தால், அது ஒரு முக்கியமான பெரிய நடவடிக்கையாகும்.


மேலும் தற்போதைய நிலைமையில், அரசாங்கத்தின் கருத்து பொதுமக்களின் கருத்துடன் ஒத்துப்போகவில்லை. காரணம் நிறைய லாபம் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக பல மக்கள் இந்தியாவில் இருந்த தங்களுடைய பணத்தை கிரிப்டோகரன்சி களில் முதலீடு செய்கிறார்கள் ஆனால் இது நிலையற்றது என்று அரசாங்கம் மக்களின் நன்மைக்காக எதிர்க்கிறது. மேலும் முதலீட்டாளர்களையும் எச்சரிக்கை விடுக்கிறது. நாட்டில் மில்லியன் கணக்கான கிரிப்டோ முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்கள் கிரிப்டோ தொழில்துறையின் பங்குதாரர்களுடன் சேர்ந்து, நாட்டில் கிரிப்டோகரன்சி பயன்பாட்டை ஏற்றுக்கொள்வதற்காக அணிதிரண்டு வருகின்றனர். மசோதாவில் காணக்கூடியவற்றிலிருந்து, இந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் நோக்கம் அரசுக்கு இல்லை.


இந்தியாவில் கிரிப்டோவின் எதிர்கால விஷயங்களில் முதலில், மசோதா முதன்முறையாக கிரிப்டோகரன்சிகளுக்கு முழுமையான தடையை முன்மொழியவில்லை. அதற்கு பதிலாக, நாட்டின் முதல் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியாக இருக்கக்கூடிய அடிப்படை தொழில்நுட்பத்தை (பிளாக் செயின்) பின்பற்ற திட்டமிட்டுள்ளது. இதன் பொருள் சுருக்கமாக கூற வேண்டும் என்றால், தொழில்நுட்பத்தை நாட்டின் நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ பகுதியாக முதன்முறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. கிரிப்டோக்களை ஒரு சிறப்பு சொத்து வகுப்பாக கருத வேண்டும். கிரிப்டோ ஒப்பந்தங்கள் மற்றும் சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்கான சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

Input & Image courtesy:India Today


Next Story
கதிர் தொகுப்பு
Trending News