Kathir News
Begin typing your search above and press return to search.

கிரிப்டோகரென்ஸி வர்த்தகத்தில் மக்கள் அதிக ஆர்வமாக உள்ளார்கள்: உயரும் முதலீடுகள்!

கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் பல்வேறுபட்ட கரன்சிகளின் மீதும் மக்கள் தற்பொழுதும் முதலீடு செய்யத் துவங்கினார்கள்.

கிரிப்டோகரென்ஸி வர்த்தகத்தில் மக்கள் அதிக ஆர்வமாக உள்ளார்கள்: உயரும் முதலீடுகள்!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  3 Dec 2021 2:21 PM GMT

கிரிப்டோகரென்ஸி என்பதும் டிஜிட்டல் பணமாக கருதப்படுகிறது. குறிப்பாக தற்பொழுது உள்ள டிஜிட்டல் யுகத்தில் பல்வேறு பொருட்களை வாங்குவதற்கு மக்கள் டிஜிட்டல் முறையில் பணத்தை செலுத்துகிறார்கள். அதே மாதிரி இங்கு பிற்பகுதியில் நீங்கள் முதலீடு செய்வதன் மூலம் மூலமாக எந்தப் பொருட்களையும் நீங்கள் வாங்கவும், விற்கவும் முடியும். இதை கட்டுப்படுத்துவதற்கு எந்த ஒரு கட்டுப்பாட்டு அமைப்பு இல்லாததால் இதில் உள்ள மிகப் பெரிய குறைபாடாகக் பார்க்கப்படுகிறது. ஏனெனில் மக்கள் கையில் அதிகப் பணம் புழங்குவதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். இதன் காரணமாக இந்தியாவில் இது அங்கீகரிக்கப்படவில்லை.


இருந்தாலும் உலக அளவில் உள்ள பல்வேறு முதலீட்டாளர்கள் இது இன்றளவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கிரிப்டோகரன்சி சந்தையில் தற்போது மாறுபட்ட வர்த்தகச் சூழ்நிலை நிலவுகிறது என்றால் மிகையில்லை, அமெரிக்கப் பங்குச்சந்தை ஒமிக்ரான் வைரஸ் மற்றும் பெடரல் ரிசர்வ் அறிவிப்பால் பெரிய அளவில் சரிவை எதிர்கொண்ட நிலையில் அதிகப்படியான முதலீடுகளும், முதலீட்டாளர்களும் தற்போது கிரிப்டோகரன்சி சந்தை பக்கம் திரும்பியுள்ளது.


கிரிப்டோ சந்தைக்குத் திரும்பிய முதலீட்டாளர்கள் முன்னணி கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யாமல் சிறிய மற்றும் பெயர் தெரியாத புதிய கிரிப்டோ கரன்சியில் அதிகம் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். இதனால் எந்தக் கரன்சி எப்போது உயரும் என்பது யாருக்கும் தெரியாத நிலை உருவாக்கியுள்ளது. இதற்கிடையில் பல கிரிப்டோகரன்சிகள் முதலீட்டாளர்களையும் ஏமாற்றவும் செய்கிறது. இந்த இக்கட்டான முதலீட்டுச் சூழ்நிலையில் யூரோ ஷிபா இனு என்ற பெயர் தெரியாத கிரிப்டோகரன்சி மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. யூரோ ஷிபா இனு இப்படிப் பெயர் தெரியாத ஒரு கிரிப்டோகரன்சி தான் இன்று முக்கியச் செய்தியாக மாறியுள்ளது. யூரோ ஷிபா இனு என்னும் ஒரு கிரிப்டோகரன்சி கடந்த 24 மணிநேரத்தில் 25,000 சதவீதம் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகக் காயின்மார்கெட்கேப் தளம் அறிவித்துள்ளது.

Input & Image courtesy: Livemint


Next Story
கதிர் தொகுப்பு
Trending News