ஐஎம்எஃப் கணிப்பின் படி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உயர்வு!!

By : G Pradeep
சர்வதேச நாணய நிதியம் (IMF) இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 2025-26 நிதி ஆண்டில் 6.6% லிருந்து 7.3% ஆக உயர்த்தியுள்ளது. உலகப் பொருளாதார கண்ணோட்டம் ஜனவரி 2026 அறிக்கையில் இந்த கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2026-ல் 6.4% ஆகவும், 2027-ல் 6.4% ஆகவும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. மூன்றாவது காலாண்டில் எதிர்பார்த்ததைவிட இந்தியாவின் செயல்பாடு சிறப்பாகவும், வலுவாகவும் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பது தொடர்பாக புள்ளி விவரங்களின் அடிப்படையில் சர்வதேச நாணய நிதியம் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2025-ல் 2.1% ஆகவும், சீனாவின் பொருளாதார வளர்ச்சி 5% ஆகவும் இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.
