Kathir News
Begin typing your search above and press return to search.

உலகளாவிய தேவையை அதிகரிக்கும் இந்திய ஏற்றுமதிகள்!

உலகளாவிய தேவையை அதிகரிக்கும் இந்திய ஏற்றுமதிகள்!
X

JananiBy : Janani

  |  22 March 2021 8:38 AM GMT

பொறியியல் சார்ந்த பொருட்கள், ரசாயனங்கள் மற்றும் கார்பெட்ஸ் போன்ற விலை குறைந்த பொருட்களின் உலகளாவிய தேவைகள் அதிகரித்துள்ளது. இதனால் இந்திய ஏற்றுமதியில் 40 சதவீதத்தை கொரோனா தொற்றின் முந்தைய காலத்தைவிட மேம்படுத்தியுள்ளது என்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பின்(FIEO) இயக்குநர் அஜய் சஹாய் தெரிவித்துள்ளார்.


மேலும் பிளாஸ்டிக், ரசாயனங்கள், கார்பேட்ஸ் மற்றும் தோலல்லாத காலணிகள் போன்ற குறைந்த வாழ்க்கைமுறை தயாரிப்புகளின் உலகளாவிய தேவைகள் அதிகரிப்புக்குக் காரணம், தொழிலாளர்கள் சார்ந்த கைவினை பொருட்கள், செராமிக் பொருட்கள் மற்றும் துணி போன்ற துறைகளை வலுப்படுத்துவதற்கான அறிகுறி என்று சஹாய் தெரிவித்தார்.

"உலகளாவிய வர்த்தகம் மீண்டுவருவது இந்தியாவின் ஏற்றுமதிக்குச் சாதகமான தாக்கத்தை உண்டாகும்," என்று இந்தியப் பொறியியல் வர்த்தக மேம்பாடு கூட்டமைப்பின் தலைவர் மகேஷ் தேசாய் தெரிவித்தார். சீனா, சிங்கப்பூர், ஜெர்மனி மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இந்தியப் பொறியியல் பொருட்களின் தேவைகள் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

மேலும் தற்போதைய காலாண்டின் கைவினை பொருட்கள் ஏற்றுமதியில் 30 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்றும் EPCH தெரிவித்துள்ளது. "ஆர்டர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க தாக இருந்தாலும், மரம், உலோகம் மற்றும் தொழிலாளர்கள் கூலி போன்றவற்றின் விலை 25-27 சதவீதம் அதிகரித்துள்ளது," என்று EPCH இயக்குநர் ராகேஷ் குமார் தெரிவித்திருந்தார். தற்போதைய காலாண்டின் வர்த்தகம் 2019 யின் அதே நிலையை எட்டக்கூடும் என்றும் எதிர்ப்பாக்கப்படுகின்றது.

மேலும் 2020 இல் எந்த புதிய தயாரிப்புகளும் அறிமுகப்படுத்தவில்லை என்று குமார் தெரிவித்தார். அமெரிக்காவில் கொரோனா தொற்றுநோய் காலங்களில் தேவைகள் 40-60,000 ஆக இருந்தாலும் இது முந்தைய காலங்களில் 50-70,000 விடக் குறைவாகும் என்றும் இந்தியாவின் மிகப்பெரிய ஷூ தயாரிப்பாளர்களான பாரிட குரூப் தலைவர் அஹ்மத் தெரிவித்தார்.


ஏப்ரல் 2020 முதல் பெப்ரவரி 2021 வரை லெதர் ஏற்றுமதியில் 32.61 சதவீதம் குறைந்தது. மேலும் சரக்குகள் சிக்கிக்கொள்ளாமல் இருக்கக் குறைந்தபட்ச பொருட்களையே ஆர்டர் செய்கின்றன என்று அவர் குறிப்பிட்டார். இந்தியாவின் ஏற்றுமதிகள் ஏப்ரல் 2020-பெப்ரவரி 2021 இல் 256.18 பில்லியன் ஆக இருந்தாலும் ஆண்டுக்கு 12.23 சதவீதம் குறைந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் பதினோரு மாதங்களில் கார்பெட் ஏற்றுமதிகள் ஆண்டுக்கு 3.16 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கார்பெட் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சித்த் நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News