Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா இரண்டாம் அலையால் 1 கோடி இந்தியர்கள் வேலையிழப்பு!

கொரோனா இரண்டாம் அலையால் 1 கோடி இந்தியர்கள் வேலையிழப்பு!
X

JananiBy : Janani

  |  1 Jun 2021 6:41 AM GMT

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையால் 10 மில்லியன் மேல் இந்தியக் குடும்பங்கள் வேலைகளை இழந்துள்ளனர் மற்றும் கடந்த ஆண்டு தொற்று ஏற்பட்டதிலிருந்து 97 சதவீதம் வீட்டு வருமானம் குறைந்துள்ளதாகவும் CMIE யின் தலைமை நிர்வாகி மகேஷ் வியாஸ் திங்களன்று தெரிவித்தார்.


வேலையின்மை விகிதம் மே மாத இறுதியில் 12 சதவீதமாக உள்ளது, இது ஏப்ரல் மாதத்தில் 8 சதவீதமாக இருந்தது. இது தற்போதைய சூழ்நிலையில் 10 மில்லியன் அல்லது 1 கோடி இந்தியர்களின் வேலையை இழந்துவிட்டது.

வேலையிழப்புக்கு முக்கிய காரணம் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை என்று வியாஸ் குறிப்பிட்டார், மேலும் "பொருளாதாரம் மீண்டும் செயல்படும் போது இந்த பிரச்சனை குறைக்கப்படும் ஆனால் முற்றிலும் தீராது," என்றும் அவர் தெரிவித்தார். வேலையிழக்கும் மக்கள் மீண்டும் வேலை பெறுவதன் கடினம் குறித்து வியாஸ் தெரிவித்தார், மீண்டும் நல்ல வேலை கிடைக்க ஒருவருடம் ஆகும் என்று அவர் தெரிவித்தார்.

நாடுமுழுவதும் முழு ஊரடங்கு காரணமாக மே 2020 இல் வேலையின்மை சதவீதம் உச்சமாக 23.5 சதவீதத்தை எட்டியது. இந்தியப் பொருளாதாரத்தில் 3-4 சதவீதம் வேலை இழப்பை இயல்பாகக் கருதலாம் என்று வியாஸ் தெரிவித்தார். ஆனால் நிலைமை முன்னேறும் வரை வேலையிழப்பு குறையாது என்று அவர் தெரிவித்தார்.


ஏப்ரல் மாதத்தில் CMIE நாடு முழுவதும் 1.75 வீடுகளில் கணக்கெடுப்பை முடித்தது. இது கடந்த ஒரு ஆண்டில் வருமானம் ஈட்டுவதில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் மூன்று சதவீத மக்கள் மட்டுமே வருமானம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர் மீதமுள்ள 55 சதவீதம் பேர் வருமானம் குறைந்துள்ளது. மீதமுள்ள 42 சதவீதம் பேர் தங்கள் வருமானம் அதுவாகவே உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Source: https://economictimes.indiatimes.com/news/economy/indicators/second-wave-rendered-1-cr-indians-jobless-97-pc-households-incomes-declined-in-pandemic-cmie/articleshow/83123171.cms

Next Story
கதிர் தொகுப்பு
Trending News