புதிய செயற்கைக்கோள்களை வாங்க 10,000 கோடி முதலீடு செய்யவுள்ள இந்தியா!

இந்தியாவில் வரும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் சொந்தமாக செயற்கோளை வாங்கி மற்றும் ராக்கெட்டை ஏவுவதற்கும் 10,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக அரசாங்கத்தின் விண்வெளி துறையான நியூஸ்பெஸ் இந்தியா லிமிடெட்(NSIL) இன் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அது இந்திய விண்வெளி நிறுவனமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(ISRO) தொலைதூர மற்றும் தகவல் தொடர்பு செயற்கோளை பெறுவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. "அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 2000 கோடி முதலீடு செய்யவுள்ளோம்," என்று NSIL யின் தொழில்நுட்ப இயக்குநர் D ராதாகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளார்.
NSIL இரண்டு தகவல் தொடர்பு செயற்கைக்கோளைச் சொந்தமாக வைத்துக்கொள்ளவும் மற்றும் அதனை இயக்குவது குறித்து விண்வெளி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. மேலும் அதற்காக இந்திய டெலிகாம் ஆபரேட்டர் வாடிக்கையாளராகக் கையொப்பமிட்டுள்ளனர். மேலும் ஐந்து இந்திய நிறுவனங்களுக்கு PSLV கட்ட கோரிக்கை விடுத்துள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
NSIL பல்வேறு பயனர்களுடன் புதிய செயற்கோளை வாங்குவது குறித்து ஆலோசித்து வருகிறது மற்றும் தகவல் துறையில் அதனைப் பயன்படுவது ஏவுவது மற்றும் சேவைகள் வழங்கவும் தொடங்கவுள்ளது என்று G நாராயணன் தெரிவித்தார்.