உத்தர்காண்டில் 1,210 கோடி நெடுஞ்சாலை திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.!
By : Janani
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி, உத்தர்காண்டில் 1,210.17 கோடி மதிப்புள்ள 28 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டமானது 231.04 Km நீளமுள்ள நெடுஞ்சாலையை அமைப்பதற்கான திட்டமாகும். "சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் 231.04 Km நீளமுள்ள 28 நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 1,210.17 கோடியை உத்தரகண்ட் மாநிலத்திற்கு ஒதுக்கியுள்ளது," என்று சாலை போக்குவரத்துக்கு மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் இதில் 48.19 கோடி பட்ஜெட்டின் கீழ் உத்தரகண்ட் மாநிலத்தில் பொதுப் பணித் துறையின் கீழ் EPC யின் தேசிய நெடுஞ்சாலையை-390B சீர்படுத்தும் பணிகளும் இதில் உள்ளடக்குகின்றது.
இது தவிர, "900.30 மீட்டர் நீளமுள்ள ருட்ரபிரயாக் சுரங்கப்பாதை மற்றும் EPC கீழ் NH-107 உடன் NH-07 ஓடு இணைக்கும் மிகப்பெரிய அலக்நந்தா ஆற்றை இணைக்கும் பாலம் கட்டுவதற்கும் மாநிலத்தின் PWD கீழ் 248.51 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது," என்று கட்கரி தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் 603.92 கோடியின் கீழ் பாரத்மாலா ப்ரயோஜனாவின் எல்லை சாலை அமைப்பின் ஹிராக் திட்டத்தின் கீழ் EPC அடிப்படையில் மேம்படுத்துவதும் அடங்கும் என்று குறிப்பிட்டார்.
Source: https://economictimes.indiatimes.com/news/economy/infrastructure/centre-approves-rs-1210-cr-highway-projects-in-uttarakhand/articleshow/81973066.cms