கைவினைக் கலைஞர்களின் பொருட்களுக்கு உரிய அங்கீகாரம்: மத்திய அரசின் புதிய முயற்சி !
கைவினை கலைஞர்களின் பொருட்களை ஈகாமர்ஸ் மூலம் விற்பனை செய்யும் புதிய திட்டத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.
By : Bharathi Latha
இந்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் தற்போது இந்தியாவில் முன்னணி இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் நிறுவனத்துடன் முதல் முறையாகக் கைகோர்த்துள்ளது. மத்திய அரசு இ-காமர்ஸ் துறையைச் சீர்படுத்தவும், நடைமுறைப்படுத்தவும் பல முக்கியமான பல முடிவுகளையும் உருவாக்கி வருகிறது. இந்த நேரத்தில் மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் பிளிப்கார்ட் உடன் ஒரு திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இ-காமர்ஸ் துறை சார்ந்த நிறுவனங்கள் மத்தியில், இது ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் இருக்கும் பல லட்சம் கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களை இந்தியா முழுவதும் இருக்கும் மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் இ-காமர்ஸ் தளம் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும் குறிப்பாக கைவினை கலைஞர்கள் தயாரித்த பொருட்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டத்திற்காக மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகம், பிளிப்கார்ட் உடன் இணைந்துள்ளது. இந்தக் கூட்டணி மூலம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் 10 கோடி வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
இதற்காகப் பிளிப்கார்ட் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் தற்பொழுது ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளது. பிளிப்கார்ட் இந்தியாவில் துவங்கப்பட்ட நிறுவனமாக இருந்தாலும், சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டு, அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனத்தால் கைப்பற்றப்பட்டு இயங்கி வருகிறது. தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இருக்கும் பல லட்சம் கைவினை கலைஞர்கள் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெறுவது மட்டும் அல்லாமல் உற்பத்தியையும் அதிகரிக்க முடியும். குறிப்பாக இந்தியர்கள் தயாரித்த பொருட்களை இந்தியா முழுவதும் மட்டும் அல்லாமல் உலக நாடுகளுக்கும் கொண்டு செல்லும் விதமாக பல லட்ச வர்த்தக நிறுவன அமைப்புகளை ஆன்லைன் வர்த்தகத் தளத்திற்குக் கொண்டு வர பயிற்சி அளிக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Input & Image courtesy:Economic times