Kathir News
Begin typing your search above and press return to search.

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க ₹1.58 கோடியை மத்திய அரசு கடன் வாங்கும் -நிதியமைச்சர்.!

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க ₹1.58 கோடியை மத்திய அரசு கடன் வாங்கும் -நிதியமைச்சர்.!
X

JananiBy : Janani

  |  29 May 2021 5:12 AM GMT

வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 43 GST கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், GST யில் வருவாய் இழப்பை ஈடுசெய்ய மாநிலங்களுக்கு ஈடுகட்ட 1.58 லட்சம் கோடியை மத்திய அரசாங்கம் கடன் வாங்கவுள்ளதாகத் தெரிவித்தார்.


"GST தொகையைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மேற்கொள்ளப்பட வேண்டும். மதிப்பீடு செய்தவரை, மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசாங்கம் 1.58 கோடியைக் கடன் வாங்கி மாநிலங்களுக்கு அனுப்பவேண்டும்," என்று 43 வது GST கவுன்சில் கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

GST சட்டத்தின் கீழ், ஜூலை 1 2017 இல் இருந்து GST அமல்படுத்தப்பட்ட முதல் ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு பற்றாக்குறையும் மாநிலங்களில் ஏற்பட்டால் இரண்டு மாத GST வழங்கப் படும் என்று உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் GST இழப்பீடு தொகை முறைகள் குறித்து விவாதிக்கச் சிறப்பு அமர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 2015-16 இல் அடைப்பையில், GST வசூலில் வருடாந்திர 14 சதவீத வளர்ச்சியைக் கருதி வருவாய் பற்றாக்குறை கணக்கிடப்படுகின்றது. கொரோனா இரண்டாம் அலை மற்றும் பொருளாதார இழப்பு போன்றவற்றால் மாநிலங்களில் தொடர்ந்து வருவாய் பற்றாக்குறை ஏற்படுகின்றது.

கடந்த ஆண்டு GST கூட்டத்தில், இடைவெளியைப் பூர்த்தி செய்ய இழப்பீடு தொகையைப் பூர்த்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் மாநிலங்களில் வேண்டுகோளின் படி பற்றாக்குறை தொகையை 97,000 கோடியிலிருந்து 1.10 லட்சம் கோடியாக மத்திய அரசு அறிவித்தது. வருவாய் பற்றாக்குறையை ஈடுசெய்ய மாநிலங்கள் கடன் வாங்கும் எண்ணத்தைத் தேர்வு செய்துள்ளது என்று சீதாராமன் தெரிவித்தார்.


GST கவுன்சில் கூட்டமானது எட்டு மாத இடைவெளிக்குப் பின்னர் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனுராக் தாகூர், மத்திய மற்றும் மாநிலங்கள் நிதி அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் வீடியோ கான்பிரென்ஸ் மூலம் கலந்துகொண்டனர். முந்தைய கூட்டம் அக்டோபர் 5 2020 இல் நடைபெற்றது.

Soure: பிசினஸ் டுடே

Next Story
கதிர் தொகுப்பு
Trending News