Kathir News
Begin typing your search above and press return to search.

வருமானவரி விதிமுறைகள் தளர்த்தி, 2 லட்சத்திற்கும் மேலாக கொரோனா சிகிச்சைக்குப் பணம் செலுத்த அரசு அனுமதி!

வருமானவரி விதிமுறைகள் தளர்த்தி,  2 லட்சத்திற்கும் மேலாக கொரோனா சிகிச்சைக்குப்  பணம் செலுத்த அரசு அனுமதி!
X

JananiBy : Janani

  |  8 May 2021 7:45 AM GMT

மே 31 ஆம் தேதி வரை மருத்துவமனைகள், மருந்தகங்கள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் நோயாளிகள் அல்லது அவர்களது உறவினர்கள் இரண்டு லட்சத்திற்கும் மேலாகப் பணத்தைச் செலுத்துவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளது. CBDT வெளியிட்ட அறிக்கையில், நோயாளிகள் அல்லது அவர்களுக்குப் பணம் செலுத்துபவர்கள் PAN, ஆதார் மற்றும் அவர்களுக்கு இடையேயான உறவைச் பெற வேண்டும் என்று அது தெரிவித்தது.


"கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் அல்லது கொரோனா சிகிச்சை மையங்களில் வருமான வரி 1961 சட்டம் 269ST கீழ், ஏப்ரல் 1 முதல் மே 31 2021 கான பணத்தை, அவர்களது ஆதார், PAN அல்லது நோயாளிகளுடன் இருக்கும் உறவுமுறையைப் பெற்றுப் பெறலாம் என்று மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது," என்று CBDT தெரிவித்திருந்தது.

தற்போதைய சூழ்நிலையில், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்கள் நோயாளிகளுக்கு ரொக்கமாகப் பணத்தைச் செலுத்தக் கோருவதாக நான்கியா & கோ LLP கூட்டாளி ஷைலேஷ் குமார் தெரிவித்தார். இருப்பினும் வருமான வரித் துறை, 2 லட்சத்திற்கும் மேலாகப் பணத்தைச் செலுத்த அனுமதிக்காது.

"இந்த தொற்றுநோய் காலத்தைக் கருத்தில் கொண்டு, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவதற்கு தற்போதைய அறிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இந்த வரம்பைத் தாண்டி கூட கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கப் பணத்தைச் செலுத்தலாம்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


"இந்த அறிவிப்பானது 2021 ஏப்ரல் 1 முதல் மே 31 2021 வரை அனைத்து பணப்பரிமாற்றங்களுக்குப் பொருந்தும்," என்று குமார் குறிப்பிட்டார்.

source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/cbdt-can-pay-rs-2l-in-cash-for-covid-care/articleshow/82475008.cms

Next Story
கதிர் தொகுப்பு
Trending News