அசத்தும் மத்திய அரசு..! 2020-21 ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 19 சதவீதம் உயர்வு.!
By : Janani
நாட்டில் அந்நிய நேரடி முதலீடுகள்(FDI) 19 சதவீதம் அதிகரித்து 2020-21இல் 59.64 அமெரிக்கா டாலராக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது முதலீடு வசதி மற்றும் வணிகத்தை எளிதாக்குவதைப் போன்ற துறைகளில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையால் ஏற்பட்டுள்ளது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது.
மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் 2020-21 ஆண்டில் 10 சதவீதம் உயர்ந்து 81.72 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கின்றது. இது 2019-20 இல் 74.39 பில்லியன் அமெரிக்கா டாலராக இருந்தது.
சிறந்த முதலீட்டாளர்கள் நாடுகளைப் பொறுத்தவரை, சிங்கப்பூர் 29 சதவீத பங்குகளுடன் முன்னிலையில் இருக்கின்றது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க மற்றும் மொரீசியஸ் உள்ளது.
"அன்னிய நேரடி முதலீடு கொள்கை சீர்திருத்தங்கள், முதலீடு வசதி மற்றும் வணிகத்தை எளிதாக்குவது போன்றவற்றில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கையால் நாட்டில் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளது," என்று அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020-21 காலப் பகுதியில் அந்நிய நேரடி முதலீட்டில் 37 சதவீதம் பங்கினை குஜராத் கொண்டுள்ளது மற்றும் அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா உள்ளது," என்றும் அது குறிப்பிட்டது.