நிதியாண்டு 21 இல் வீட்டுக் கடன் அழுத்தத்தால் கவலை அதிகரிப்பு - SBI அறிக்கை!
By : Janani
இந்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) வீட்டு நிதியில் கடந்த ஆண்டு இருந்த 32.5 சதவீதத்தில் இருந்தது 37.3 சதவீதமாகக் கடுமையாக உயர்ந்ததால் இந்தியக் குடும்பங்கள் மீதான நிதி அழுத்தம் கவலைக்குரிய வகையில் அதிகரித்து உள்ளதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவிக்கப்பட்டுள்ளது.
மேலும் திங்களன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த ஆண்டு நிலைமை மோசமடைய கூடும் என்றும் வங்கியில் நிதியாண்டு 21 வைப்புத்தொகை குறைந்து வருவதோடு சுகாதார செலவினங்கள் அதிகரித்து வருவதால் வீடுகளில் கடன் சுமை அதிகரிக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மற்ற நாடுகளை விட மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்துக்கான இந்திய வீடு கடன் குறைவாகவே உள்ளது என்பதையும் குறிப்பிட்டது. மேலும் பொருளாதார நடவடிக்கைகள் ஜூன் மாதத்தில் முன்னேற்றத்தைக் கண்டுவருவதாகப் பல அறிக்கைகள் தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
source: https://www.ndtv.com/business/increase-in-household-debt-stress-is-worrying-says-sbi-report-2479475
: https://economictimes.indiatimes.com/news/economy/indicators/indian-households-to-face-more-stress-in-fy22-with-increasing-debt-sbi-research/articleshow/84135462.cms