இந்தியாவில் கடந்த 35ஆண்டுகளில் முதன்முறையாக மின்சார தேவையில் சரிவு!
By : Janani
இந்தியாவின் வருடாந்திர மின்சார தேவை 35 ஆண்டுகளில் முதன்முறையாக மார்ச் நிதியாண்டில் குறைந்துள்ளது. இது குறிப்பாக நாடு முழுவதும் கொரோனா தொற்றுநோயின் பொழுது கடுமையான ஊரடங்கு காரணம் என்று அரசாங்க மதிப்பாய்வு தெரிவிக்கின்றது.
மார்ச் 2021 இறுதியில் மின்சார தேவை 1 சதவீதம் குறைந்துள்ளது. இது கடுமையான ஊரடங்கு காரணமாக ஆகஸ்ட் இறுதி வரை ஆறு மாதங்களுக்கு மின்சார தேவை குறைந்தது.
POSOCO ஆபரேட்டர் வெளியிட்ட அறிக்கையின் படி, ஒரு வருடத்திற்கு முந்தைய மார்ச் மாதத்தில் மின்சார தேவை 23.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அது தொடர்ச்சியாக ஏழு மாதங்களாக அதிகரித்துள்ளது மற்றும் மார்ச் 2010 யில் மிகவும் வேகமாக அதிகரித்து வந்துள்ளது.
முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 2020-21 நிதியாண்டில் மின்சார உற்பத்தி 0.2 சதவீதம் சரிந்தது என்று POSOCO டேட்டா காட்டுகிறது. மார்ச் மாதத்தில் கடந்த ஆறு மாதங்களில் மின் உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து வந்தது. முக்கியமாக மார்ச் 2020 இறுதி வாரத்தில் விதிக்கப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கால் மின்சார பயன்பாட்டில் ஆச்சரியப்படும் விதமாகச் சரிவைக் கண்டது.
இந்த ஆண்டு மீண்டும் பொருளாதாரம் மீண்டு வருவதால் மின்சாரத்தின் தேவை சற்று அதிகரித்து வருகின்றது. மேலும் வட இந்தியாவில் மார்ச் மாதத்தில் வெப்ப நிலை அதிகளவில் பதிவாகியுள்ளது, இது ஏர் கண்டிஷனிங் பயன்பாட்டை அதிகரிக்கக் கூடும்.