இந்த ஆண்டு கோதுமை விவசாயிகளுக்குக் கூடுதலாக 42 சதவீதம் பணத்தை அரசாங்கம் வழங்கியது!
By : Janani
கோதுமை விவசாயிகளின் இந்த ஆண்டு கொள்முதலை ஒப்பிடும் போது 2020 யை 40 சதவீதத்திற்கும் அதிகமான பணத்தை அரசாங்கம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பொருளாதாரத்தைப் பாதித்துள்ள நிலையில் கிராமப்புற சந்தைகளில் அதிக பணப்புழக்கம் ஏற்பட்டுள்ளது.
"33.7 மில்லியன் டன் கோதுமை கொள்முதலுக்கு எதிராகக் கோதுமை விவசாயிகளுக்கு இதுவரை 49,965 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 28 மில்லியன் டன் கோதுமையைக் கொள்முதல் செய்து 35,000 கோடி வழங்கப்பட்டது," என்று FCI தலைவர் அதிஷ் சந்திரா தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 2.81 மில்லியன் விட இந்த ஆண்டு பயனாளிகளின் எண்ணிக்கை 3.4மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. "இவை அனைத்தும் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்பட்டுள்ளது," என்று சந்திரா தெரிவித்தார். கொள்முதல் செய்த 48-72 மணி நேரத்திற்குள் பணம் அனுப்பப்படும். இந்த மொத்த கொள்முதல் பணத்தில் 66 சதவீதம் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகளுக்குத் தரப்பட்டுள்ளது. அவர்கள் 62 சதவீதத்திற்கும் மேலாக மத்திய அரசாங்கத்திற்குப் பங்களிப்பை அளித்துள்ளனர்.
ஹரியானா மற்றும் பஞ்சாபைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் அதன் இலக்கை அடைந்துள்ளது. ஏற்கனவே 80 சதவீதம் கொள்முதலை அடைந்துள்ளது, ஜூன் 30 இல் கொள்முதல் காலம் நிறைவடையவுள்ளது.
தானியங்கள் எளிதில் சந்தைகளில் கிடைக்கும் நோக்கில் தனியார் வர்த்தகர்களுக்கு மானிய விலையில் அரசாங்கம் தனது குடவுனை திறந்துள்ளது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/agriculture/govt-disburses-42-more-money-to-wheat-farmers-this-year/articleshow/82533704.cms