Kathir News
Begin typing your search above and press return to search.

வருமான வரி தாக்கல் செய்ய புதிய இ-போர்டல் ஜூன் 7 முதல் தொடக்கம்.!

வருமான வரி தாக்கல் செய்ய புதிய இ-போர்டல் ஜூன் 7 முதல் தொடக்கம்.!
X

JananiBy : Janani

  |  6 Jun 2021 10:55 AM GMT

ஜூன் 7 இல் வருமான வரித் துறை புதிதாக வருமான வரியைத் தாக்கல் செய்யும் இ-போர்ட்டலை தொடங்கவுள்ளது. இது உடனடியாக வருமானத்தைச் செயல்படுத்துவதற்கு மற்றும் பணத்தைத் திரும்பப்பெறுவதையும் இணைக்கும்.


வரி தவணை செலுத்துவோர் முன்கூட்டியே வரி செலுத்துவோர் சிரமப்படுவதைத் தவிர்ப்பதற்குப் பிறகு புதிய வரி செலுத்தும் முறை ஜூன் 18 2021 இல் தொடங்கப்படும்.

"இந்த புதிய இ-தாக்கல் செய்யும் போர்டல் வரி செலுத்துவோருக்கு வசதியையும், நவீன மற்றும் தடையற்ற செயல்திறனைப் பெறுவதே நோக்கமாகும்," என்று மத்திய நேரடி வரி வாரியம் சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"வரி செலுத்துவோர் மற்றும் பிற பரிவர்த்தனை செய்பவர்களின் புகார்களைத் தவிர்ப்பதற்கு CBDT எடுத்த மற்றொரு முயற்சியாகும்," என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டது. மேலும் இந்த புதிய முறையில் இலவசமாக ஆன்லைன் மற்றும் ஆப்லைன் இலவச ITR சேவைகளைக் கொண்டிருக்கும்.

மேலும் வரி செலுத்துவோர் வருமானம், வீடு விவரம், தொழில் உள்ளிட்டவற்றைப் போன்ற தங்கள் சுயவிவரங்களை ITR யில் நிரப்புவதற்கு முன்பு பயன்படுத்தப்படும். மேலும் இது வரி செலுத்துவோரின் நிலுவையில் உள்ள செயல்களையும் காண்பிக்கும்.


மேலும் புதிய போரட்டலை செயல்படுத்துவதற்கு தற்போதுள்ள போர்டல் வரி செலுத்துபவர் மற்றும் அதிகாரிகள் ஜூன் 6 வரை இருக்காது என்று கடந்த மாதம் ஆணையம் தெரிவித்தது.

Source: எகனாமிக் டைம்ஸ்

Next Story
கதிர் தொகுப்பு
Trending News