மே முதல் வாரத்தில் இந்திய ஏற்றுமதி 80 சதவீதம் உயர்வு!

தொடர்ந்து ஏற்பட்டு வருகின்ற வளர்ச்சியைத் தொடர்ந்து, வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 80 சதவீதம் அதிகரித்து 7.04 பில்லியன் டாலராக உள்ளது. அதே நேரத்தில் மே முதல் வாரத்தில் இறக்குமதி 3.91 பில்லியன் டாலராக உள்ளது.
இறக்குமதிகள் மே 1-7 வரை 80.7 சதவீதம் உயர்ந்து 8.86 டாலராக உள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 4.91 பில்லியன் டாலராக உள்ளது. அதே நேரத்தில் 2019 இல் 10.39 பில்லியன் டாலராக இருக்கின்றது. அதே நேரத்தில் ஏப்ரல் மாத ஏற்றுமதி கடந்த ஆண்டை மூன்று மடங்கு அதிகரித்து 30.21 பில்லியன் டாலராக இருந்தது. நகை, சணல், கார்பெட், கைவினை பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், முந்திரி, பெட்ரோலியம், கெமிக்கல்ஸ் உள்ளிட்டவை அதிக ஏற்றுமதியைக் கண்டது.
ஏற்றுமதி வளர்ச்சி ஊக்கமளிக்கிறது'மற்றும் ஆர்டர் புத்தகங்கள் சீராக உள்ளது என்று இந்திய ஏற்றுமதி கூட்டமைப்பு அமைப்புகளின்(FIEO) தலைவர் S K சரப் தெரிவித்தார்.
"MEIS யில் உள்ள சிக்கல்களைக் கவனிக்க அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஏற்றுமதியின் இலாபதன்மை பாதிக்கப்படுவதால், ஏற்றுமதியை மேலும் கொண்டுசெல்வதற்கு RoDTEP குறித்து உடனடியாக அறிவிக்கவேண்டும்," என்று அவர் தெரிவித்தார்.
Source: https://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/indias-exports-surge-80-to-7-billion-during-may-1-7/articleshow/82495448.cms