பருத்தி நூல் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் விதிக்க APEC கோரிக்கை!
By : Janani
உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குப் பருத்தி நூல் விநியோகிப்பதை அதிகரிக்கவும் மற்றும் விலைகளைக் கட்டுக்குள் வைக்கப் பருத்தி நூல் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்(AEPC) சனிக்கிழமை அன்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டது. பருத்தி நூல் விலையைக் குறைக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வந்தாலும், கடந்த நான்கு மாதங்களாக அது அதிகரித்து வருகின்றது மற்றும் இதனால் பாதிப்புகள் ஏற்படுகின்றது என்று AEPC தலைவர் A சக்திவேல் தெரிவித்தார்.
"உள்ளூர் உற்பத்தியாளர்களுக்குப் பருத்தி நூல் விநியோகத்தை அதிகரிக்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கேட்டுள்ளோம். மேலும் 26 மற்றும் அதற்கு மேற்பட்ட பருத்தி நூல் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் பரிந்துரை செய்துள்ளோம்,'' என்று அவர் தெரிவித்தார்.
மேலும் சிறு ஆலை உரிமையாளர்களுக்குப் பருத்தி விலையை CCI குறைந்திருந்தாலும், இது பருத்தி நூல் விலையைக் குறைக்கவில்லை என்றும் சக்திவேல் குறிப்பிட்டார்.
"பருத்தி நூலின் விலை பருத்தி விலையை விட அதிகமாக உள்ளது. விலை ஏற்றத்தின் தொடர் அதிகரிப்பால், நூல் கிடைப்பதில் கணிக்கமுடியாத தன்மை உள்ளதாலும், ஆடை உற்பத்தியாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குச் செய்த ஒப்பந்தத்தில் தடுமாற்றம் ஏற்படுகின்றது," என்று அவர் தெரிவித்தார்.
"இது கைத்தறி மற்றும் பவர்லும் உற்பத்தியாளர்களுக்கும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தறிகள் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால் உள்நாட்டுத் தொழில்துறையும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளது," என்று குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தித் துறையின் விலையில் நூல் ஏற்றுமதி செய்யப்பட்டால் இந்த துறை நிச்சயமாகக் கடுமையாகப் பாதிப்படையும் என்று AEPC தலைவர் தெரிவித்தார். "நூல் ஏற்றுமதியில் வரி விதிக்கப்பட வேண்டும். இது உள்நாட்டில் நூல் விலையைக் குறைக்கும் மற்றும் மதிப்பினை கூட்டி வேலைவாய்ப்பினை அதிகரிக்கும்," என்று கூறினார். மேலும் இது ஆடை ஏற்றுமதியையும் அதிகரிக்கும் என்று சக்திவேல் கூறினார்.