புதிய சாதனையைப் படைத்துள்ள ஏப்ரல் மாத GST வசூல்!
By : Janani
ஏப்ரல் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இது அதற்கு முந்தைய மாதங்களில் பதிவு செய்திருந்த 1.24 லட்சம் கோடியை விட 14 சதவீதம் அதிகமாகும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னேற்றமானது நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அநேக இடங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஏற்பட்டுள்ளது என்று சனிக்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மொத்த தொகையில் மத்திய GST வசூல் 27,837 கோடியாகவும், மாநில GST வசூல் 35,621 கோடியாகவும், IGST 68,481 கோடியாகவும் மற்றும் செஸ் வசூல் 9,445 கோடியாகவும் உள்ளது.
மேலும் கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட முழு ஊரடங்கால் ஏப்ரல் மாதத்தில் GST வசூல் 16,707 கோடியாக இருந்தது. "2021 மார்ச் மாதத்தில் செய்யப்பட்ட பொருளாதார நடவடிக்கையால் இது உயர்ந்தது. தற்போது ஏப்ரல் மாதத்தில் குறைந்த பொருளாதார நடவடிக்கையால் வரும் மாதங்களில் வசூல் குறையும்," என்று டெல்லோய்ட் இந்தியாவின் மூத்த இயக்குநர் MS மணி தெரிவித்துள்ளார்.
மேலும் அக்டோபரில் இருந்து கடந்த ஏழு மாதங்களாக GST வசூல் 1 லட்சத்திற்கும் மேலாகப் பதிவு செய்துள்ளது. இது ஒவ்வொரு மாதமும் கணிசமாக உயர்ந்து கொண்டே வந்துள்ளது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/gst-collection-for-april-of-rs-141384-crore-sets-new-record/articleshow/82342248.cms?UTM_Source=Google_Newsstand&UTM_Campaign=RSS_Feed&UTM_Medium=Referral