தடுப்பூசி வரி குறைப்புக்கு மாநில அரசுகள் அடங்கிய GST குழு எதிர்ப்பு!
By : Janani
வரி விகிதத்தை ஆய்வு செய்யும் மத்திய மற்றும் மாநில அதிகாரிகளின் முக்கிய குழுவான GST கவுன்சிலின் பிட்மென் குழு(Fitment Committee), கொரோனா தடுப்பூசிகளின் வரியை ஐந்து சதவீதத்தில் இருந்து குறைப்பதற்கு எதிராகப் பரிந்துரையை வழங்கியுள்ளது.
இதுபோன்று முழுமையாக விலக்கு அளிப்பதன் மூலம் உற்பத்தி செலவுகளை அதிகரிக்கக் கூடும் என்று அது தெரிவித்தது, காரணம் கொரோனா தடுப்பூசிகளின் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்கள் உள்ளீடு பொருட்கள் மற்றும் சேவைக்குச் செலுத்தப்படும் வரிக்கு உள்ளீடு கடன் பெற இயலாது.
சில மாநிலங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு முழுமையான விலக்கு அல்லது குறைந்தபட்சம் 0.1 சதவீதம் வரியை வைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
ஜூலை இறுதி வரை, ஆக்சிஜென், ஆக்சிஜென் கான்சென்ட்ரொட்ர்ஸ் மற்றும் பல்ஸ் ஆக்சிமீட்டர் போன்றவற்றுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் வரியைக் குறைக்கப் பரிந்துரைத்தது. கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு வரி விகிதத்தை 5 சதவீதம் ஆகஸ்ட் மாதம் வரை குறைக்கப் பரிந்துரைத்துள்ளது.
தடுப்பூசிகள் முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தால் பெறப்பட்டு இலவசமாக வழங்கப்படுவதால், இறுதியில் GST மத்திய மற்றும் மாநிலங்களுக்கு வந்து சேரும் என்று குழு தெரிவித்தது.
கொரோனா தொடர்பான மருத்துவ பொருட்களுக்கு வரி விகிதங்களைக் குறைக்கக் கோரிக்கை இருந்தபோதிலும், கொரோனா சிகிச்சை மாறுபடுதல் குறித்து குழு எந்த பரிந்துரையும் வைக்கவில்லை.
இந்த பரிந்துரைகள் வெள்ளிக்கிழமை நடவிருக்கும் GST கூட்டத்தில் எடுக்கப்படலாம் மற்றும் அதைத் தொடர்ந்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
Source: Economic Times