மே மாத GST வசூல் ரூபாய் 1.02,709 கோடி..!
By : Janani
மே மாத சரக்கு மற்றும் சேவை வரி வசூல் 1.02,709 கோடியாகப் பதிவாகியுள்ளது. இது தொடர்ந்து எட்டாவது மாதமாக வரி வசூல் 1 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த மாதம் GST வசூல் தொடர்ந்து எட்டு மாதமாக 1 லட்சம் கோடியைப் பதிவு செய்திருந்தாலும், இது ஏப்ரல் 2021 யை விடக் குறைவாக உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாத GST வசூலை ஒப்பிடும் போது மே மாத GST வசூல் 30 சதவீதம் சரிந்துள்ளது. ஏப்ரல் மாத GST வசூல் 1.41 லட்சம் கோடியைப் பதிவு செய்துள்ளது.
தினசரி நோய் தொற்று குறைந்து கொண்டிருக்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் முக்கிய நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஜூலை மாத முன்னேற்றத்துக்கு முன்னர் ஜூன் மாதத்தில் GST வசூல் இன்னும் குறையக்கூடும் என்று ஆதாரங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு மாநிலங்களில் கொரோன தொற்றால் ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்த போதிலும், அதே மாதம் GST வருவாயை விட வரி 65 சதவீதம் அதிகமாக உள்ளது என்று நிதியமைச்சகம் சனிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது.
இதில் ஜூன் 4 வரை உள்நாட்டு பரிவர்த்தனைகளில் GST வசூல் அடங்கும். "ஏப்ரல் 21 மாதம் முதல் பரிவர்த்தனைகள் 1 லட்சம் கோடிக்கு மேல் வசூலைப் பதிவு செய்துள்ளது, கொரோனாவால் எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார தாக்கத்தை விட மிகக் குறைவாக உள்ளது என்பதையே நிரூபிக்கிறது," என்று டெலோய்ட்டே இந்தியாவின் மூத்த இயக்குநர் MS மணி தெரிவித்தார்.
நிதியாண்டு 22 ஏற்படும் GST வசூல் தாக்கத்தை எதிர்கொள்ள அடுத்த மாதம் வசூலைக் கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மே 2021 இல் வசூலிக்கப்பட்ட மொத்த GST வசூலில் CGST 17,592 கோடி, SGST 22,653, IGST 53,199 மற்றும் செஸ் 9,265 கோடியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மாதத்தில் CGST க்கு 15,014 கோடியும் மற்றும் IGST யில் இருந்து 11,653 கோடியை வழக்கமான தீர்வாக அரசு வழங்கியுள்ளது.
மேலும் கடந்த ஆண்டு இதே மாதத்தை ஒப்பிடுகையில், பொருட்களின் இறக்குமதி வருவாய் 56 சதவீதம் அதிகமாகவும், உள்நாட்டுப் பரிவர்த்தனை வருவாய் 69 சதவீதம் அதிகமாகவும் உள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டது.
Source: டைம்ஸ் நவ்