இந்தியாவில் GST வரி வசூல் 2வது முறையாக உச்சம்: சுமார் 1.31 லட்சம் கோடி !
இந்தியாவில் GST வரி வசூல் தற்போது இரண்டாவது முறையாக உச்சத்தை அடைந்துள்ளது.
By : Bharathi Latha
கடந்த மாதத்தில் இந்தியாவில் GST வரி வசூல் அளவு 1,31,526 கோடி ரூபாயாக உயர்ந்து அக்டோபர் மாத உச்சத்தைக் கடந்து 2வது பெரிய வசூல் அளவீட்டைப் பதிவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் GST வரி வசூல் அளவீடு 1.30 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நவம்பர் மாதம் CGST பிரிவில் 23,978 கோடி ரூபாயாகவும், SGST பிரிவில் 31,127 கோடி, IGST பிரிவில் 66,815 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. மேலும் செஸ் பிரிவில் 9,606 கோடி ரூபாய் அளவிலான வரி வருமானத்தையும் பெற்றுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதத்தைத் தொடர்ந்து நவம்பர் மாதமும் GST வரி வசூல் அளவு 1.30 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.
நோய் தொற்று காரணமாக கடந்த வருடத்தை ஒப்பிடுகையில், தற்போது 25 சதவீதம் அதிக GST வரி வசூலை மத்திய அரசாங்கம் தற்போது பெற்றுள்ளது. 2019-20ஆம் நிதியாண்டின் நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகமாகும். GST வரி பலகையை மறுசீரமைப்புச் செய்ய இது சரியான தருணம் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். மேலும் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாணய கொள்கை இருக்க வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
சமீபத்தில் NIPFP அமைப்பு சமர்ப்பித்துள்ள திட்டத்தின்கீழ் ஜீரோ சதவீத வரி அளவீடு கணக்கில் சேர்க்காமல் மீதமுள்ள 5%, 12%, 18% மற்றும் 28% ஆகிய 4 வரி பலகையை 8%, 15% மற்றும் 30% வரிப் பலகையாகப் பிரிக்கலாம் என்ற மாதிரி திட்டத்தை முன்வைத்துள்ளது. 8%, 15% மற்றும் 30% வரிப் பலகையாகப் பிரிக்கப்படுவதன் மூலம் மத்திய அரசு எவ்விதமான வரி வருமான அளவீடும் பாதிக்காது என்று குறிப்பிட்டு உள்ளது.
Input & Image courtesy: Indianexpress