Kathir News
Begin typing your search above and press return to search.

இந்த நிதியாண்டு GST இழப்பீடு தொகையாக 30,000 கோடியை மத்திய அரசு வெளியீடு!

இந்த நிதியாண்டு GST இழப்பீடு தொகையாக 30,000 கோடியை மத்திய அரசு வெளியீடு!
X

JananiBy : Janani

  |  31 March 2021 11:21 AM GMT

செவ்வாய்க்கிழமை அன்று மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களின் நிதியாண்டு 21 க்கு சரக்கு மற்றும் சேவை வரியின்(GST) இழப்பீடாக 30,000 கோடியை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த வாரம் மாநிலங்களவையில், மார்ச்குள் மாநிலங்களுக்கு GST இழப்பீடாக 30,000 கோடி வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் தெரிவித்தார். அதற்கிடையில் கொரோனா தொற்றுநோயின் முந்தைய காலத்தில் மாநிலங்களுக்கு GST இழப்பு தொகை வழங்கப்பட்டது.

மார்ச் 27 இல் வெளியிடப்பட்ட தொகையுடன் சேர்த்து, நிதியாண்டுக்கு 21 க்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீடு தொகை 70,000 கோடியாக உள்ளது. மேலும் GST குறித்த தற்காலிக தீர்வாகக் குறிப்பிட்ட தொகையாகக் கூடுதலாக 14,000 கோடியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது மார்ச் 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது.

"GST இழப்பீடுகள், அடுத்து அடுத்த லோன் மற்றும் தற்காலிக IGST இழப்பீடு முதலியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, நிதியாண்டு 2020-21 கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நிலுவை GST தொகை மொத்தம் 63,000 உள்ளது," என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.


GST வசூலில் ஏற்பட்ட பற்றாக்குறையைத் தொடர்ந்து மத்திய அரசு அடுத்து அடுத்து லோனை வழங்கியது. ICRA மதிப்பீடுகளின் படி, நிதியாண்டு 22 யின் GST இழப்பீடு தொகை 2.7 முதல் 3.0 லட்ச கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. பொருளாதார மீட்சி மற்றும் வரி நிர்வாகம் மேற்கொண்ட தொடர் நடவடிக்கையால் அக்டோபர் 2020 இல் இருந்து தொடர்ச்சியாக GST வசூல் 1 லட்சம் கோடிக்கு மேலாகத் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து வருவாய் வசூல் 1.1 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News