Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா நிவாரண பொருட்களுக்கு GST-யில் 5% குறைக்க பரிந்துரை!

கொரோனா நிவாரண பொருட்களுக்கு GST-யில் 5% குறைக்க பரிந்துரை!
X

JananiBy : Janani

  |  8 Jun 2021 8:40 AM GMT

எட்டு உறுப்பினர்கள் கொண்ட அமைச்சர்கள் குழுவான GoM, கொரோனா நிவாரண பொருட்களுக்கு 5% GST வரியில் குறைக்கப் பரிந்துரை செய்துள்ளது. மேகாலயா முதலமைச்சர் கான்ராட் சங்கமா அரசு தலைமையிலான இந்த குழுவானது, நிவாரண பொருட்கள் விதியை GST கவுன்சில் தீர்மானிக்க வேண்டும் இன்று இந்த விஷயத்தை மீண்டும் கவுன்சில்கு பரிந்துரை செய்துள்ளது.


"தடுப்பூசிகள் விலை குறித்து GST கவுன்சில் முடிவு செய்யவேண்டும் என்றும் GoM பரிந்துரை செய்துள்ளது," என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது குறித்து மீண்டும் முடிவு செய்ய GST கவுன்சில் கூட வேண்டும் என்றும் அது தெரிவித்தது.

மருத்துவ ஆக்சிஜென், ஆக்சிஜென் கான்சென்ட்ரடோர்ஸ், பல்ஸ் ஆக்சிமீட்டர் மற்றும் சோதனை கருவிகள் போன்ற கொரோனா நிவாரண பொருட்களில் 5 சதவீதம் GST வரியைக் குறைக்கக் குழு பரிந்துரைத்தது. மேலும் கருப்பு பூஞ்சை நோயைக் குணப்படுத்துவதற்கான மருந்துகளின் GST வரியைக் குறைக்கும் GoM பரிந்துரைத்தது.

மே 28-இல் கடந்த கூட்டத்தின் போது கருப்பு பூஞ்சை குணப்படுத்துவதிற்கான ஆம்போடெரிஸின் B மருந்துக்கான இறக்குமதிக்கு GST விலக்கு அளித்தது. பல்வேறு மாநிலங்கள் கொரோனா உபகரணங்கள், மருந்துகள் போன்றவற்றுக்கு முழு வரி விலக்களிக்கக் கோரிக்கை வைத்தது.


அரசாங்கத்திற்கு நன்கொடை வழங்குவதற்காக அல்லது மாநிலங்களில் நிவாரணத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டால் அதற்கு விலக்கு அளிக்க கவுன்சில் முடிவு செய்துள்ளது. இந்த விலக்கானது ஆகஸ்ட் 31 2021 வரை தொடரும் என்று நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Source: Business Today

Next Story
கதிர் தொகுப்பு
Trending News