கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் MGNREGA கீழ் ஊதியம் உயர்வு.!
By : Janani
கிராம மேம்பாடு அமைச்சகத்தின் மாநில வாரிய ஊதிய விகிதத்தின் படி, மகாத்மா தேசிய ஊரக வேலை உத்தரவாத திட்டம் 2005 கீழ், ஊதியங்களின் சராசரி அதிகரிப்பு 2021-22 ஆண்டில் 4 சதவீதம் குறைவாக உள்ளது. இந்த எண்ணிக்கையானது 2020-21 ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது.
அனைத்து மாநிலங்களிலும் இந்த உயர்வு மிகக் குறைவாக உள்ளது. மேகாலயாவில் 2020-21 இல் 203 ஆக இருந்தது தற்போது 2021-22 இல் 13 ரூபாய் உயர்ந்து 226 ஆக உள்ளது. மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் மிகக் குறைவாக ஊதியம் 3 ரூபாய் உயர்ந்துள்ளது. "ஊதியத்தை நிர்ணைப்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. தற்போதைய முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படுகின்றது," என்று NCPRI யின் சமூக ஆர்வலர் நிகில் டே கூறினார்.
கேரளாவைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஊதிய உயர்வில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. 2020-21 யில் ரூபாய் 256 ஆக இருந்தது தற்போது 2021-22 இல் 17 ரூபாய் உயர்ந்து 273 ரூபாயாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் 9 ரூபாய் உயர்ந்து 213 ஆக உள்ளது இது 2020-21 இல் 204 ரூபாயாக இருந்தது.
"வெளி மாநிலங்களிலிருந்து வரும் விவசாய பொருட்களை அதிகம் சார்ந்திருப்பது கேரளாவாகும். எனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்தால் விவசாய பொருட்களும் உயரும். கணக்கீடுகளைச் சரியாக மேற்கொண்டால் நிச்சயம் ஊதியத்தில் உயர்வு இருக்கும்," என்று SAS யின் முன்னாள் இயக்குனர் அபே ஜார்ஜ் தெரிவித்தார்.
மார்ச் 18 2021 அறிக்கையின் படி, சராசரியாக MGNREGA கீழ் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் செயலில் உள்ளனர் மற்றும் கேரளாவில் 3,36,888 குடும்பங்கள் 100 நாட்கள் கூலி வேலையை முடித்துள்ளனர் என்று கிராம ஊரக வளர்ச்சி அமைச்சகம் தெரிவித்துள்ளது. "கணக்கீடுகளை அமைச்சகம் பகிரவேண்டும் அல்லது தகவல் அறியும் சட்டத்தை நாடவேண்டும். இதைத் தேர்தல் சமயங்களில் விவாதிக்கப்படவேண்டும். சட்டமன்ற தேர்த்தலில் வாக்களிக்கும் முன்பு மக்களுக்கு ஊதியம் குறித்த தகவலை வெளிப்படையாகத் தெரிவிக்கவேண்டும்," என்று ஜார்ஜ் தெரிவித்தார்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட குழு தெரிவித்ததின் படி, தேசிய குறைந்தபட்ச ஊதியம் ஒரு நாளைக்கு 375 ரூபாயாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதுவே தொழிலாளர்கள் அவர்களின் குடும்பத்தை மற்றும் உடல்நலத்தைப் பாதுகாக்கத் தேவையான குறைந்தபட்ச தொகையாகும். இருப்பினும், தற்போது மற்றும் முந்தைய கணக்கீட்டில் இந்த அளவை பூர்த்தி செய்யவில்லை. ஹரியானாவில் மிக உயர்ந்த குறைந்தபட்ச ஊதியமாக 315 ரூபாய் உள்ளது.
MGNREGA சட்டம் 2005 யின் கீழ், கையேடு தொழிலாளர்களுக்கு மாநிலங்கள் வாரியாக ஊதிய விகிதங்களை மத்திய அரசு தீர்மானிக்கின்றது. "மத்திய அரசு இதை வெளிப்படையாக மாற்ற வேண்டும், மாநில மற்றும் தொழிலாளர் குழுக்களுடன் கலந்துரையாட வேண்டும். இது ஒரு முத்தரப்பு செயல்முறையாகும், மையம் அதனைத் தனியாக முடிவு செய்ய முடியாது." என்று சமூக ஆர்வலர் டே தெரிவித்தார்.
எனவே மொத்தமாக 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதசத்தில் ஊதியத்தில் குறைவான அதிகரிப்பாக 10 ரூபாய்க்கும் கீழாக உள்ளது. "மத்திய அரசாங்கம் ஊதிய விகிதத்தை நிர்ணைக்கவேண்டும். குறைந்தபட்சத்துக்குக் கீழே ஊதியத்தை நிர்ணைக்கும் போது அது அரசியலமைப்புக்கு விரோதமாக இருக்கும்," என்று நிகில் டே குறிப்பிட்டார்.
source: https://www.factchecker.in/explained/except-in-meghalaya-there-has-been-a-low-hike-in-mgnrega-wages-for-2021-22-no-hike-in-kerala-736257