ஐக்கிய அரபு நாடுகளில் இந்தியாவின் UPI-யை பயன்படுத்த முடிவு !
இந்தியாவின் UPI சேவையை ஐக்கிய அரபு நாடுகளில் பயன்படுத்த முடிவு.
By : Bharathi Latha
இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் சேவை மற்றும் பயன்பாட்டைப் பெரிய அளவில் மாற்றியது UPI தான். இந்தியாவின் பெரும் நகரங்கள் முதல் சிறிய நகரங்கள் வரையில் UPI வாயிலான பேமெண்ட் சேவை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கும் சரி, மக்களுக்கும் சரி பல நன்மைகள் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் UPI தளத்தை ஐக்கிய அரபு நாடுகளிலும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. பொதுவாக வெளிநாட்டுச் சேவைகள் தான் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும்.
ஆனால் தற்பொழுது இந்தியாவின் சேவையின் முதல் முதலாக வெளிநாடுகளுக்கு செல்ல இருப்பதும் கவனிக்கத் தக்கது. UPI பேமெண்ட் தளத்தை உருவாக்கிய நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்ரேஷன் இந்தியா (NPCI) அமைப்பின் சர்வதேச கிளை நிறுவனமான NIPL உடன் குளோபல் டிஜிட்டல் காமர்ஸ் எனேப்ளரான நெட்வொர்க் இண்டர்நேஷனல் உடன் UPI தளத்தை ஐக்கிய அரபு நாடுகளில் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.இந்த ஒப்பந்தம் மூலம் UPI சேவையை இனி மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலும் விரிவாக்கம் செய்ய உள்ளது.
இதில் ஐக்கிய அரபு நாடுகளில் 2022ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்த மொபைல் பேமெண்ட் தளத்தை அறிமுகம் செய்யப்போகிறது. ஐக்கிய அரபு நாடுகள் இதன் மூலம் 2022 மார்ச் மாதத்திற்குப் பின் ஐக்கிய அரபு நாடுகளில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அனைத்தும் அதைப் பயன்படுத்த முடியும். Unified Payments Interface என்பதன் சுருக்கம் தான் UPI இது மிகவும் எளிமையான கட்டமைப்புடன், பாதுகாப்புடனும் இயங்குகிறது.
Input & Image courtesy:Livemint