17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியம் 9,871 கோடியை நிதியமைச்சகம் வெளியீடு!
By : Janani
வியாழக்கிழமை அன்று நிதியமைச்சகம், 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியத்தின் இரண்டாவது மாத தவணை 9,871 கோடியை வெளியிட்டது. மேலும் இரண்டாவது மாத தவணை நிதியும் சேர்ந்து இந்த நிதி ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை மானியம் முதல் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 19,742 கோடி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருவாய் பற்றாக்குறை மானியத்தை மாநிலங்களுக்குச் சட்டம் 275 கீழ் மத்திய அரசாங்கம் வழங்குகிறது. இந்த மானிய தவணைகளானது அதிகாரப்பூர்வ பகிர்வுக்குப் பின்னர், மாநிலங்களில் வருவாய் கணக்குகளில் உள்ள இடைவெளியை ஈடு செய்வதற்கு நிதியமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் வழங்கப்படுகின்றது.
"17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டிற்கான வருவாய் பற்றாக்குறை மானியத்தின் இரண்டாவது மாத தவணை 9,871 கோடியை நிதித்துறை இன்று வெளியிட்டுள்ளது," என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 மாநிலங்களுக்கு இந்த பற்றாக்குறை வருவாய் நிதியை வெளியிட 15 வது நிதி ஆணைய கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டது.
ஆந்திர பிரதேசம், அசாம், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடக, கேரளா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, பஞ்சாப், ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்காளம் போன்றவை வருவாய் பற்றாக்குறை மாநிலங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாநிலங்கள்.
17 மாநிலங்களுக்கு 2021-22 நிதியாண்டிற்கான மொத்த அதிகார பகிர்வு வருவாய் பற்றாக்குறை மானியத்தை 1,18,452 கோடியாக 15வது நிதி ஆணையம் அறிவித்தது. இந்த மானியம் மாநிலங்களுக்கு 12 மாத தவணைகளில் வழங்கப்படுகின்றது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/finance-ministry-releases-rs-9871-crore-as-revenue-deficit-grant-to-17-states/articleshow/82431171.cms