2020 - 21 ஆம் நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதியில் 10.88 சதவீதம் சரிவு..!
By : Janani
நாட்டில் தொற்று நோய் மற்றும் மந்தமான வெளிநாடு சந்தைகள் காரணமாக 2020-21 ஆண்டில் இந்தியாவின் கடல் உற்பத்தி ஏற்றுமதியில் 10.88 சதவீதம் சரிந்து 5.96 பில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது என்று வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை அன்று தெரிவித்தது.
மேலும் அமெரிக்கா, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய இறக்குமதியாளராக உள்ளது. இதில் மீன்களைத் தொடர்ந்து இறால் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
2019-20 இல் 46,662.85 கோடி மதிப்புள்ள 12.89,651 டன் கடல் உணவுகளை இந்தியா ஏற்றுமதி செய்தது. இது 2020-21 இல் 11,49,341 டன் ஆக உள்ளது. மேலும் இது ஒருவருடத்திற்கு முந்திய ஆண்டை ஒப்பிடும்போது கடல் உணவு ஏற்றுமதியில் 10.88 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்தது.
இறால் அளவு 51.36 சதவீதத்தைப் பதிவு செய்கிறது, இது மொத்த டாலர் மதிப்பில் 74.31 சதவீதம் ஆகும். தொடர்ந்து அமெரிக்கா அதிக இறக்குமதியாளராக உள்ளது, அதனைத் தொடர்ந்து சீனா 1,01,846 டன், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் போன்றவை இருக்கிறது.
இருப்பினும் தற்போது இறால் ஏற்றுமதி 9.47 சதவீதம் குறைந்து 4.42 பில்லியன் அமெரிக்கா டாலராக உள்ளது.
மேலும் அமெரிக்கா தொடர்ந்து 2,91,948 டன் இறக்குமதியாளராக முன்னிலையில் உள்ளது, இது இந்தியக் கடல் உணவு இறக்குமதியாளர்களில் 41.15 சதவீத டாலராக இருக்கின்றது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"939.17 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள 2,18,343 டன் கடல் உணவுகளைச் சீனா இறக்குமதி செய்கிறது. இது சந்தையில் இரண்டாம் இடத்தை பெறுகின்றது," என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source: பிசினஸ் டுடே