2020 இல் இந்தியாவிற்கு ADB 3.92 பில்லியன் டாலர் கடனை பதிவு செய்துள்ளது!
By : Janani
வெள்ளிக்கிழமை அன்று ADB வங்கி இந்தியாவிற்கு 2020 இல் 13 திட்டங்களுக்கான 3.92 பில்லியன் அமெரிக்கா டாலர் கடனை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இதில் தொற்று காலங்களில் கொரோனா தொடர்பான திட்டங்களுக்கு 1.8 பில்லியன் அமெரிக்க டாலரும் அடங்கும்.
இந்தியாவிற்குத் தொற்று காலங்களில் உதவும் ஒரு பகுதியாக, மணிலாவை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், நோயைக் கட்டுப்படுத்த ஏழைகள் மற்றும் பிற பாதிப்படையக் கூடிய நிறுவனங்களுக்கு நிவாரணம் மற்றும் சமூகப் பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நகர்ப்புறங்களில் ஆரம்பச் சுகாதார மையங்களில் மேம்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவ நிதி வழங்க ADB ஒப்புதல் அளித்துள்ளது. ADB 1986 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, மிக உயர்ந்த வருடாந்திர கடன் வழங்கியது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும் இந்தியா கொரோனா தொடர்பான சவால்களை எதிர்கொள்ள மேலும் ஆதாரங்களை வழங்க ADB தயாராக உள்ளது, கொரோனா தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்தவும், சிறு வணிகங்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் கல்வியை ஆதரிக்கும் நிதி உட்பட போன்றவற்றுக்கு உதவத் தயாராக உள்ளதாக இந்திய ADB நிர்வாகி டேக்கோ கோனிஷி தெரிவித்தார்.
மேலும் ADB வெளியிட்ட அறிக்கையின் படி, 2020 இல் இந்தியாவில் ஏற்கப்பட்ட திட்டங்களில் டெல்லி முதல் மீரட் வரை 500 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் போக்குவரத்துக்குத் தாழ்வாரம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், கர்நாடகாவில் மின் விநியோகத்தை வலுப்படுத்த அசாமில் 120 மெகாவாட் ஹைட்ரொ எலெக்ட்ரி பவர் பிளான்ட் அமைக்கும் திட்டங்களும் அடங்கும் என்று அது தெரிவித்தது.
மேலும் ADB ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சிறு நகரங்களில் நகர்ப்புற மேம்பாட்டிற்கான கடன்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் மேற்கு வங்காளத்தில் நிதி ஒருங்கிணைப்பு திட்டத்தை ஆதரிக்கவும் ADB நிதி வழங்கியுள்ளது.
source: https://www.cnbctv18.com/finance/adb-commits-record-392-billion-loan-to-india-in-2020-9300141.htm