2021 முதல் காலாண்டில் இந்தியச் சர்க்கரையின் அதிகளவு இறக்குமதியாளர் யார் தெரியுமா?
By : Janani
மத்திய அரசாங்கம் கொண்டுவந்த MAEQ 2020-21 திட்டத்தின் கீழ் இந்தியா இதுவரை 55 சதவீதம் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளதாக அகில இந்தியச் சர்க்கரை வர்த்தகம்(AISTA) தெரிவித்துள்ளது. இந்த திட்டம் கொண்டுவந்த முதல் மூன்று மாதங்களில் மொத்த சர்க்கரையில் 38 சதவீதம் இந்தியச் சர்க்கரையை இந்தோனேசியா இறக்குமதி செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியா ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காகவும் மற்றும் உள்நாட்டுச் சந்தையில் உபரி சர்க்கரையைக் குறைப்பதற்காகவும் ஜனவரி 2021 இல் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
இந்த திட்டமானது கருப்பு உற்பத்தியாளர்களுக்கு உதவுவதற்காகக் கொண்டுவரப்பட்டது, காரணம் உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரையின் விலையில் அதிகரிப்பின் மூலம் சர்க்கரை ஆலைகள் தங்கள் பில்களை சரியான நேரத்தில் செலுத்த முடியும். இருப்பினும் சர்க்கரை உற்பத்தியைச் செய்யும் மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து நிலுவைத் தொகை அதிகமாக உள்ளது.
AISTA அறிக்கையின் படி, இந்தியா ஏப்ரல் 9 வரை 15 லட்சம் டன் மூல சர்க்கரை, 9.5 லட்சம் டன் வெள்ளை சர்க்கரை, 37,000 டன் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை என சுமார் 28 லட்சம் டன் சர்க்கரையை வழங்கியுள்ளது.
இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதியில் முதல் 6 இடங்களை இந்தோனேசிய 38.5 சதவீதமும், ஆப்கானிஸ்தான் 12.3 சதவீதமும், ஸ்ரீலங்கா 9.9 சதவீதமும், ஐக்கிய அரபு அமீரகம் 9 சதவீதமும், சோமாலியா 7.6 சதவீதமும், பங்களாதேஷ் 5.6 சதவீதத்தையும் பதிவு செய்துள்ளது. AISTA செய்தியாளர்களுக்குத் தெரிவித்தபடி, நாடு 49 லட்ச டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய ஓப்பந்தமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/foreign-trade/indonesia-emerges-largest-buyer-of-india-sugar-in-first-quarter-of-2021-says-aista/articleshow/82033523.cms