2021-22 நிதியாண்டில் 10.5 சதவீதமாக மாறாமல் இருக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்தி!
By : Janani
உலகளவில் மீண்டும் பரவ தொடங்கியுள்ள கொரோனா தொற்றின் காரணமாக உலக வளர்ச்சியை நிர்ணைக்க முடியாததைச் சுட்டிக்காட்டி, 2021-22 நிதியாண்டின் உள்நாட்டு உற்பத்தி 10.5 சதவீதமாக மாறாமல் வைத்திருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். "தற்போது தடுப்பூசியின் விநியோகமும் மற்றும் அதன் செயல்திறனே பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது," என்றும் RBI கவர்னர் குறிப்பிட்டார்.
மேலும் கொரோனாவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி தொடர்ந்து மொனிட்டரி கொள்கையைத் தொடரும் என்று அவர் உறுதியளித்தார். தொற்றுநோய் தொடர்ந்து வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவே உள்ளது. தொழில்துறை உற்பத்தி குறியீடு(IIP) ஜனவரி மாதத்தில் 1.6 சதவீதம் குறைந்தது மற்றும் PMI உற்பத்தி மார்ச் மாதத்தில் ஏழு மாதங்களாகக் குறைந்தது. ஏப்ரல் 1 இல் தொடங்கிய பொருளாதாரம் 10.5 சதவீதமாக விரிவடையக் கூடும் என்று எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி தெரிவித்தது.
2021-22 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி முதல் காலாண்டில் 26.2 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 8.3 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 5.4 சதவீதமாகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 6.2 சதவீதமாகக் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா தொற்று நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடை செய்யக்கூடும் என்பதால், RBI கவர்னர் முக்கிய விகிதங்களை மாறாமல் வைத்திருக்கிறார். மேலும் மத்திய வங்கி 2021 யின் நான்காவது காலாண்டுக்கான சில்லறை பண வீக்கத்தை 5 ஆக திருத்தியுள்ளது.
மேலும் CPI பணவீக்கம் முதல் காலாண்டில் 5.2 சதவீதமாகவும், இரண்டாவது காலாண்டில் 5.2 சதவீதமாகவும், மூன்றாவது காலாண்டில் 4.4 சதவீதமாகவும் மற்றும் நான்காவது காலாண்டில் 5.1 சதவீதமாக இருக்கும் என்று RBI வங்கி எதிர்பார்க்கின்றது.
புதன்கிழமை இந்தியாவின் புதிய தொற்றுநோய் பரவல் 1,15,736 ஆகப் பதிவாகியிருந்தது. திங்களன்று முதன்முறையாக 1 லட்சத்தைத் தாண்டிய பிறகு அமெரிக்காவை அடுத்து புள்ளிவிவரங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது.