2021 ஏப்ரல் முதல் வாரத்தில் ஏற்றுமதி 297 சதவீதம் அதிகரிப்பு!
By : Janani
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் 7 நாட்களில் நாட்டில் பொருட்கள் ஏற்றுமதியின் சதவீதம் 297.2 அதிகரித்து, 6.79 பில்லியன் டாலராக உள்ளது. மேலும் இது இதே காலப்பகுதியில் 2019-20 நிதியாண்டில் இருந்து 8.42 சதவீதம் ஆதரித்துள்ளது. மேலும் இந்த நிதியாண்டின் முதல் வாரத்தில் இறக்குமதி 244.2 சதவீதமாகவும் 9.66 பில்லியன் டாலராக உள்ளது மற்றும் இது கடந்த நிதியாண்டு முதல் வாரத்தை ஒப்பிடுகையில் 0.65 சதவீதம் குறைந்துள்ளது.
இதுகுறித்து வெளிவந்த டேட்டாவில் பொறியியல் தொடர்பான பொருட்கள் ஏற்றுமதியில் 209.65 சதவீதம் அதிகரித்து மற்றும் 2019-20 நிதியாண்டை விட 8.4 சதவீதம் YoY அதிகரித்துள்ளது. கற்கள், நகைகள் மற்றும் பெட்ரோலியம் முதலியவற்றிலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
ஏழு நாட்கள் காலப்பகுதியில் அமெரிக்கா மற்றும் சீனா அதிக ஏற்றுமதியைக் கணக்கிட்டுள்ளது. இறக்குமதியில் பெட்ரோலியம், கச்சா எண்ணெய் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனா இறக்குமதியில் அதிக பங்கினை பெற்றுள்ளது.
மேலும் வெள்ளி, உரம், கச்சா மற்றும் செய்தித்தாள் போன்றவற்றின் இறக்குமதி குறைந்ததால் சில அதிகரிப்புகளை ஈடுசெய்ய முயன்றதாக டேட்டா தெரிவிக்கின்றது. கடந்த ஆண்டில் ஏப்ரலில் கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகள் பாதிக்கப்பட்டன.
Source: NDTV