25 மாநிலங்களுக்கான கிராமப்புற உள்ளாட்சி மானியமாக 8,923 கோடியை மத்திய அரசு வெளியீடு!
By : Janani
ஞாயிற்றுக்கிழமை அன்று நிதித்துறை அமைச்சகம் 25 மாநிலங்களுக்கு கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்கு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியமாக 8,923 கோடியை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த மானியமானது கிராமங்கள், தொகுதி மற்றும் மாவட்டங்கள் ஆகிய மூன்று அடுக்கு பஞ்சாயத்து நிறுவனங்களுக்கும் இது வழங்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளது.
தற்போது நாட்டில் பெரியளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு, அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு RLB இந்த மானியத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அது தெரிவித்தது. 15 வது நிதி ஆணையக்குழுவின் பரிந்துரைப் படி, மாநிலங்களுக்கான முதல் தவணை நிதியானது ஜூன் 2021 யில் வெளிவிடப்படவிருந்தது.
இருப்பினும், தற்போது கொரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டும் மற்றும் பஞ்சாயத்து அமைச்சகம், நிதியமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில், கணக்கிடப்பட்ட தேதிக்கு முன்னரே இந்த மானியத்தை வெளியிட முடிவு செய்ததாக, அமைச்சகம் தெரிவித்துள்ளது.
source: https://economictimes.indiatimes.com/news/economy/finance/covid-19-management-centre-releases-rs-8923-cr-to-25-states-as-grants-for-rural-local-bodies/articleshow/82495297.cms