வங்கி வைப்புகளுக்கான இன்ஷூரன்ஸ் அளவு உயர்வு: மத்திய அரசு முடிவு !
வங்கி வைப்புகளுக்கான இன்ஷூரன்ஸ் அளவை உயர்ந்த மத்திய அரசு முடிவு.
By : Bharathi Latha
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் வங்கிகள் மிக முக்கியப் பங்கு வகிக்கும் நிலையில், வைப்பு நிதியாளர்களின் பணத்திற்குக் கட்டாயம் பாதுகாப்பு அளிக்க வேண்டியது அவசியம்.வங்கி அமைப்புகளுக்கான இன்சூரன்ஸ் அளவை உயர்த்த மத்திய அரசு முடிவு. இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்பவர்களுக்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கப்படாமல் மொத்த வங்கி துறைக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்துள்ளார். வங்கியின் வைப்பு நிதியாளர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனில் வங்கிகளுக்குப் பாதுக்காப்பு அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
தற்சமயம் வரை சுமார் 1 லட்சம் வைப்பு நிதியாளர்களுக்குச் சுமார் 1,300 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அடுத்தச் சில நாட்களில் மீதமுள்ள 3 லட்சம் வைப்பு நிதியாளர்களுக்கும் தங்களின் டெபாசிட் தொகையை இந்த இன்சூரன்ஸ் திட்டத்தின் வாயிலாகத் திருப்பி அளிக்கப்பட உள்ளது எனவும் மோடி தெரிவித்துள்ளார். வங்கி வைப்பு நிதியாக்கான இன்சூரன்ஸ் தொகையை 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரையில் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
மேலும் வங்கி வைப்பு நிதிகளுக்கு அளிக்கப்பட்டும் இந்த திட்டம் மூலம் சுமார் 98% பேர் பாதுகாப்பு பெற்றுள்ளனர். மக்கள் பெரும் நம்பிக்கை உடன் வங்கியில் டெபாசிட் செய்யும் போது அவர்களுக்குத் தகுந்த நம்பிக்கையைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
Input & Image courtesy:Times of India