அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு: அன்றாடம் உழைக்கும் மக்களை பாதிக்குமா?
பண்டிகை காலங்களை ஒட்டி அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு அன்றாட உழைக்கும் மக்களை பாதிக்குமா?
By : Bharathi Latha
இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையானது உச்சம் அடைத்து வருகின்றன. இது மழை, இறக்குமதி பாதிப்பு, உற்பத்தி வரத்து குறைவு உள்ளிட்ட பல காரணிகளினால் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பல்வேறு உணவு பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தக்காளி மற்றும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையானது மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக நகர்ப்பகுதிகளில் விலையானது அதிகளவு அதிகரித்து வருகின்றது.
இது அதிகப்படியான எரிபொருள் விலை, கனத்த மழையால் உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட பல காரணிகளினால் அதிகரித்துள்ளது. சமையல் எண்ணெய் விலை சர்வதேச அளவில் சமையல் எண்ணெய் விலை அளவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவிலும் சமையல் எண்ணெய் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அரசு சமையல் எண்ணெய் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கும் விதமாக, மார்ச் 22 வரை இறக்குமதி வரி குறைக்கப்பட்ட பிறகு, சமையல் எண்ணெய் விலை குறைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெங்காயத்தின் விலையை உயர்வை கட்டுக்குள் வைக்க, நடப்பு பருவத்தில் 2 லட்சம் டன்கள் வெங்காயத்தை அரசு இருப்பு வைத்துள்ளது. தற்போது பண்டிகைகால பருவம் தொடங்கி உள்ள நிலையில், தேவையானது அதிகரித்துள்ளதால் விலையானது சற்று அதிகரித்துள்ளது. பருவம் காலத்தில் விலை பருவ காலத்தில் சில முக்கிய உணவுப் பொருட்களை விலையானது அதிகமாக இருக்கலாம். இது பெரும்பாலும் உணவு பணவீக்கத்தை தூண்டுகின்றன.
Input & Image courtesy: Thehindu