இந்தியாவில் அதிகரிக்கிறதா பணவீக்கம்? நிபுணர்கள் கருத்து என்ன ?
இந்தியாவில் விலைவாசி உயர்வு பண வீக்கத்தை ஏற்படுத்தும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.
By : Bharathi Latha
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிப்படைந்த காலகட்டங்கள் தவிர தற்போது, தற்போது அதிகளவிலான வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கி அழுகி பாழடைந்துள்ளன. பருவம் தவறி பெய்த மழையால் விவசாயம் உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நெருக்கடியில் இருக்கும் மக்களை, இன்னும் நெருக்கடிக்கு தள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விலைவாசி விகிதம் மக்களை இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளி வருகின்றது. இந்த நிலையில் பருவகால மாற்றம் என்பது மேலும் விவசாய உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இதனால் பற்றாக்குறை நிலவலாம். இதன் காரணமாக விலைவாசி அதிகரிக்கலாம். இதன் மூலம் பணவீக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பருவமழை பற்றாக்குறை இதனால் பொருளாதார வளர்ச்சி விகிதமான இன்னும் சரிவுக்கு தள்ளப்படலாம் என பார்க்லேஸ் நிறுவனத்தின் இந்தியா தலைமை பொருளாதார நிபுணர் குழு எச்சரித்துள்ளார். நாடு 8% பருவமழை பற்றாக்குறையை எதிர்கொளண்டுள்ளது. இது எதிர்காலத்தில் மீண்டும் விதைப்பு மற்றும் அறுவடை பருவங்களை பாதிக்கும். இதன் காரணமாக விலைவாசி கடுமையாக உயரும்.
பணவீக்கம் அதிகரிக்கலாம் இது மேற்கோண்டு பணவீக்கத்திற்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நடுத்தர காலத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இது சாமானிய மக்களை பாதிக்கலாம். ரிசர்வ் வங்கியின் கண்ணோட்டம் ரிசர்வ் வங்கி வளர்ச்சி கண்ணோட்டத்தில் வட்டி விகிதத்தினை மாற்றாமல் வைத்துள்ளது. ஆனால் பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கவும், இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் இது மட்டும் போதாது. ஏனெனில் தற்போது வரையில் ஒரு நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது.
Image courtesy:The Hindu