Kathir News
Begin typing your search above and press return to search.

இந்திய பொருளாதாரத்தில் பணவீக்க கட்டுப்பாடு: ஆய்வு முடிவு என்ன சொல்கிறது ?

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தி நமக்கு சாதகமான பலன்களை பெறுவதற்கு பெறுவதற்கான ஆய்வு முடிவு.

இந்திய பொருளாதாரத்தில் பணவீக்க கட்டுப்பாடு: ஆய்வு முடிவு என்ன சொல்கிறது ?
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  30 Aug 2021 1:49 PM GMT

தற்போது உள்ள நோய் தொற்று காலத்தில் மக்கள் சிலவற்றில் முதலீடு செய்வது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. முதலில் நீங்கள் முதலீடு செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய பல்வேறு அம்சங்களில் பணவீக்கமும் ஒன்றாக அமைகிறது. முதலீடு அளிக்கக்கூடிய உண்மையான பலன் மீது பணவீக்கம் தாக்கம் செலுத்துகிறது என்பதே காரணம். பணவீக்கம் என்பது வாங்கும் சக்தி மீதான தாக்கமாக புரிந்து கொள்ளப்படுகிறது. இது முதலீடு தரும் பலனையும் பாதிக்கிறது. எனவே, முதலீட்டின் பலனை கணக்கிடும் போது, பணவீக்கத்தின் தாக்கத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்.


இந்த காரணத்தால் தான், பணவீக்கத்தை மிஞ்சக்கூடிய முதலீடுகளை நாட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. நிதி இலக்குகளை அடையும் ஆற்றலை பாதிக்கும். அதற்காக அதிக பலன் தரும் முதலீடுகளை நாடினால், அவை தொடர்பான நம்பகத்தன்மையும் அதிகமாக இருக்கும் என்பதையும் உணர வேண்டும். உதாரணத்திற்கு, பங்கு முதலீடு அதிக பலன் அளிக்கக்கூடியது, ஆனால், சந்தையின் ஏற்ற இறக்கம் அதன் பலனை பாதிக்கக்கூடியது. இந்த பணவீக்கத்தின் பாதிப்பை எதிர்கொள்ளும் சரியான முதலீடு அணுகுமுறையை பின்பற்றுவது அவசியமாகிறது.


நீண்ட கால நோக்கில் முதலீடு செய்வது பணவீக்கத்தை எதிர்கொள்வதற்கான எளிய வழியாக கருதப்படுகிறது. நீண்ட கால நோக்கில் சீராக முதலீடு செய்யும் போது, கூட்டு வட்டியின் பலன் பணவீக்கத்தை மிஞ்சக் கூடியதாக இருக்கும். எனவே தான், ஆரம்ப கட்டத்திலேயே முதலீடு செய்வது அவசியம் என்கின்றனர். இதன் மூலம் நிதி இலக்குகளை வேகமாக அடையலாம். பங்கு முதலீடு என்று வரும் போது, மியூச்சுவல் பண்ட் வழியை நாடுவது, அதன் இடர்தன்மையை பெருமளவு குறைக்கும். கொரோனா பாதித்த காலத்திலும் மியூச்சுவல் பண்ட்ல் முதலீட்டை தொடர்ந்தவர்கள் நல்ல பலன் பெற்றுள்ளதாக அண்மை ஆய்வு தெரிவிக்கிறது.

Input:https://m.economictimes.com/markets/stocks/news/why-controlling-inflation-is-not-the-job-of-the-rbi-governor-alone/articleshow/85594884.cms

Image courtesy:economic times


Next Story
கதிர் தொகுப்பு
Trending News