Kathir News
Begin typing your search above and press return to search.

கொரோனா காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதா ? பொருளாதார ஆலோசகர் கருத்து !

தொற்று நோயின் காரணமாக இந்திய பொருளாதாரம் பெரும் பாதிக்கப்படவில்லை என்று பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதா ? பொருளாதார ஆலோசகர் கருத்து !

Bharathi LathaBy : Bharathi Latha

  |  1 Sep 2021 2:04 PM GMT

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 20.1% ஆக வளர்ச்சி கண்டுள்ளது. இது கடந்த காலாண்டில் மோசமான நிலைக்கும் மத்தியில் நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது. இதே கடந்த ஆண்டில் வளர்ச்சி விகிதம் வரலாறு காணாத அளவு மோசமான வளர்ச்சியினை கண்டது. இதற்கிடையில் கொரோனாவின் இரண்டாம் கட்ட அலைக்கு மத்தியில் பொருளாதாரம், அவ்வளவாக பாதிக்கப்படவில்லை என தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


ஆனால் இதை மற்றொரு நிபுணர் நாட்டின் GDP விகிதம் என்பது இரட்டை இலக்கில் வளர்ச்சி கண்டிருந்தாலும், குறைந்த அடித்தளத்தில் இருந்து வளர்ச்சி கண்டுள்ளது. ஆக இதனை சிறப்பானதாக கருத முடியாது. இது நாட்டின் வலுவான அடிப்படை காரணிகளை காட்டுகின்றது. ஆக இது வலுவான வளர்ச்சி என எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார் என்று பிறர் கருத்துக்களை தெரிவித்து உள்ளார்கள்.


பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் இந்திய பொருளாதாரம் கொரோனா தொற்று நோயின் தாக்கத்தில் இருந்து, நல்ல வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது. இதனால் வளர்ச்சியில் ஒரு கூர்மையான அதிகரிப்பினைக் கண்டுள்ளது. இது அரசு செலவினங்கள், சீர்திருத்த நடவடிக்கைகள், பணவியல் கொள்கை ஆதரவுகள், கொரோனா தடுப்பூசி போடுதல் என பலவும் பொருளாதார வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடந்த ஆண்டில் வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட நிலையில், தலைமை பொருளாதார ஆலோசகர், பொருளாதாரம் வி வடிவ வளர்ச்சியினை காணலாம் என கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அதே போல மீண்டும் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Input:https://m.economictimes.com/news/economy/indicators/indias-economy-slammed-by-covid-19-needs-its-lost-growth/articleshow/85813389.cms

Image courtesy:economic times


Next Story
கதிர் தொகுப்பு
Trending News