லாக்கர் வசதி குறித்து புதிய விதிமுறைகள் வெளியீடு: RBI விளக்கம் !
வங்கிகளில் செயல்படும் லாக்கர் வசதி குறித்து புதிய விதிமுறைகளை RBI வெளியிட்டுள்ளது.
By : Bharathi Latha
ஒவ்வொரு வங்கியிலும் குறிப்பாக வாடிக்கையாளர்கள் வசதிக்காக வழங்கப்படும் லாக்கர் வசதி குறித்து ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி ஊழியர்களால் மோசடி நடக்கும் பட்சத்தில், தீ விபத்து, வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு பெட்டகம் சேதமடைந்தாலும் இழப்பீடு வேண்டும். எனவே இதில் இழப்பீட்டுத் தொகையை ஓராண்டுக்குள் வாடிக்கையாளருக்கு வங்கிகள் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. மேலும் வங்கி லாக்கரில் சட்டத்திற்குப் புறம்பான பொருட்கள் அல்லது அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்ற விதிமுறையை சேர்த்துள்ளதாக புதிதாக அறிவித்துள்ளது.
மேலும் ஒவ்வொரு வங்கிகள் அவற்றின் கிளை வாரியாக காலியாக உள்ள லாக்கர் குறித்த விவரங்களை வெளிப்படையாக வலைதளத்தில் வெளியிட வேண்டும். அதோடு லாக்கர் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும். வங்கியின் கவனக்குறைவால் பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும். இது தவிர நில நடுக்கம், வெள்ளம், மின்னல், புயல் போன்ற இயற்கை சீற்றத்திலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்தினாலோ லாக்கரில் உள்ள பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு அதிகாரம் உண்டு லாக்கர் வாடகைக்கு 3 ஆண்டுகள் டெர்ம் டெபாட்சிட்டினை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம். எனினும் இது தற்போது பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. புதிய விதிமுறைகள் வங்கியின் தற்போதைய வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதிக்கு விண்ணப்பித்தவர்களின், CDD விதிமுறைகளுடன் முழுமையாக இணங்குவோருக்கு லாக்கர் வசதியை வழங்கலாம். மேலும் ஒரு வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு மட்டுமல்லாமல், வங்கி தொடர்பு இல்லாத பிற வாடிக்கையாளர்களுக்கும் லாக்கர் வசதியை வழங்க முடியும் என்று RBI கூறியுள்ளது.
Image courtesy: Times of India