மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,625 கோடி நிதி ! ஒப்புதல் வழங்கிய மத்திய அரசு !
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 1,625 கோடி நிதியை மத்திய அரசு வழங்கி உள்ளது.

இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்காக பெண்கள் இருந்து வருகிறார்கள். குறிப்பாக பெண்கள் சுய உதவி குழுக்கள் மூலம், கடன் பெற்று தங்களுக்கு தேவையான தொழில்களை அவர்கள்தானே நடத்துவதன் மூலமாக அவர்களுடைய பொருளாதார ரீதியான முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். மேலும் மத்திய அரசும் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக தற்பொழுது அதிகமான அளவில் நிதியை ஒதுக்கியுள்ளது.
அந்த வகையில் தற்போது, மகளிர் சுய உதவி உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு தற்சார்பு பெண்கள் அமைப்பினருடன் பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றினார். அப்போது, 4 லட்சம் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.1,625 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து உள்ளார். இதைத் தொடர்ந்து, சுய உதவிக் குழுவினர் வெற்றிக் கதைகள் தொகுப்பை வெளியிட்டார். குறிப்பாக இதில் தீன்தயாள் அந்தியோதயா திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுவினர்கள் கலந்துகொண்டு பயன் அடைந்துள்ளார்கள்.
மேலும் பிரதமரின் சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 7,500 பேருக்கு ரூ.25 கோடியை முதலீட்டு பணமாகவும் மற்றும் ஊரக வாழ்வாதார திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்பட்ட 75 விவசாய உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு ரூ.4.13 கோடி நிதியையும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வழங்க உள்ளார் என்றும் பிரதமர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Image courtesy: The Hindu