இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடுப்பூசி மருந்து ! மத்திய நிதியமைச்சரின் கருத்து !
இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு தடுப்பூசி மருந்து என்று மத்திய நிதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
By : Bharathi Latha
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகிய அனைத்தும் பாதிப்பு அடைந்து வந்தது. குறிப்பாக இரண்டாம் அலையின் போது, இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் வளர்ச்சி அடைய கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு வந்த பிறகு, தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீண்டும் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் நாட்டின் வர்த்தக சந்தை குறித்தும், தடுப்பூசி முக்கியதுவத்தை குறித்தும் முக்கியமான ஒரு அறிவிப்பை கூறியுள்ளார்.
தமிழ்நாடு மெர்கண்டைல் பேங்க்-ன் 100 ஆண்டு விழாவில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் கலந்துக்கொண்டார். இந்நிலையில் இவ்விழாவில் பேசி மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இந்தியாவில் தற்போது மக்களுக்கு தடுப்பூசி அளிக்கும் திட்டம் மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வருகிறது, வழக்கத்தை விடவும் அதிகமான தடுப்பூசி அனைவருக்கும் அளிக்கப்பட்டு வரும் காரணத்தால் அதிகளவிலானோர் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி பாதுகாப்பை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் இவ்விழாவில் இந்தியாவில் தற்போது 73 கோடி பேர் தடுப்பூசியின் பாதுகாப்பு பெற்றுள்ளனர். மக்கள் வர்த்தகம் செய்யவும், பொருட்களை வாங்கவும், வர்த்தகத்தை மேம்படுத்த என அனைத்து பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைக்கும் தடுப்பூசி பாதுகாப்பு அடித்தளமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தடுப்பூசி இதேவேளையில் தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட 40,000க்கும் அதிகமான வேக்சின் கேம்ப் மூலம் சுமார் 20 லட்சம் மக்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு சுகாதார துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Input & image courtesy:Timesofindia