கச்சா எண்ணெய் இருப்பை பயன்படுத்த இந்தியா முடிவு: பின்னணி என்ன?
இருப்பு வைத்துள்ள கச்சா எண்ணையை பயன்படுத்த இந்தியா முடிவெடுத்துள்ளது.
By : Bharathi Latha
பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அதிகப்படியான கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உலக நாடுகள் OPEC நாடுகளிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து இருந்தன. ஆனால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க OPEC நாடுகள் அதற்கு மறுப்புத் தெரிவித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வைச் சமாளிக்க அமெரிக்கா, இந்தியா உட்பட உலகில் பல நாடுகள் முக்கிய முடிவை எடுத்துள்ளது. தற்காலிகமாகக் கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உலக நாடுகள் அவசர காலத்திற்காகச் சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெய்-ஐ பயன்படுத்த முடிவு செய்துள்ளது.
இதனால் சந்தையில் கச்சா எண்ணெய் வரத்து அதிகமாகி விலை குறையத் துவங்கியுள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவும் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கச்சா எண்ணெய் உற்பத்தி OPEC நாடுகளிடம் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப் பல நாடுகள் கோரிக்கை வைத்தும் தனது முடிவை மாற்றாமல் தொடர்ந்து அதே அளவில் உற்பத்தியைச் செய்ய முடிவு செய்துள்ளதாக அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பின்பு அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக அவசர கால இருப்பில் இருந்து கச்சா எண்ணெய்-ஐ பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
இதைத் தொடர்ந்து 23-ஆம் தேதி இந்தியா தனது இருப்பில் வைத்திருக்கும் strategic petroleum reserves-ல் இருந்து சுமார் 5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்-ஐ பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரிட்டன் ஆகிய ஆகிய அனைத்து நாடுகளும் இதேபோன்ற முடிவைத் தான் எடுத்துள்ளது. இதன் மூலம் OPEC நாடுகளின் உதவி இல்லாமல் எரிபொருள் விலையில் தற்காலிகமாகக் குறைக்க முடியும் என்பது உலக நாடுகளின் திட்டமாக உள்ளது.
Input & Image courtesy:NDTV News